29 Mar 2021

பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குவதே சிவில் பாதுகாப்புக்குழுக்களின் கட்டாய கடமையாகும்.

SHARE

பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குவதே சிவில் பாதுகாப்புக்குழுக்களின் கட்டாய கடமையாகும்.

கல்வியை இழந்துள்ள சிறுவர்களை சிவில்பாதுகாப்புக்குழுக்கள் சிறுவர்களின்  வீடுகளுக்கு தேடிச்சென்று அவர்களை மீண்டும் பாடசாலைக்கு இணைத்து கல்விகற்க முயற்சிக்க வேண்டும்.கட்டாயம் 15 வயதுக்கு கீழ்பட்ட நம்முடைய ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கட்டாயக்கல்வியை விருப்பத்துடன் ஊட்டி நாளைய தலைவர்களை உருவாக்கும் தார்மீக பொறுப்பு கிராமிய சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கு இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிரதி  பொலிஸ்மாதிபர் லக்சிறி விஜசேன தெரிவிப்பு.

தாய்,தந்தையற்ற சிறுவர்கள் அவர்களுடைய வயோதிபடைந்த உறவினர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.இளவயது திருமணம்,பொருளாதார கஸ்டம்,வீட்டின் வறுமை,காரணமாக பல சிறுவர்கள் கல்வியை இழந்தும் இருக்கின்றார்கள்.இன்னும் பல சிறுவர்கள் கல்வியை தொடர்வதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றது.அவ்வாறானவர்களை சிவில்பாதுகாப்புக்குழு வீடுகளுக்கு தேடிச்சென்று அவர்களை மீண்டும் பாடசாலைக்கு இணைத்து கல்விகற்க முயற்சிக்க வேண்டும்.கட்டாயம் 15 வயதுக்கு கீழ்பட்ட நம்முடைய ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கட்டாயக்கல்வியை விருப்பத்துடன் ஊட்டி நாளைய தலைவர்களை உருவாக்கும் தார்மீக பொறுப்பு கிராமிய சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கு இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிரதி  பொலிஸ்மாதிபர் லக்சிறி விஜசேன தெரிவித்தார்.

"இலங்கையைப் பாதுகாப்போம் - கிராம பொலிஸ் பாதுகாப்புக் குழுவினால் மாவட்ட மட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாங்காடு கிவேஸ் மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை(28)   இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன தலைமையில் இடம்பெற்ற அறிவுறுத்தல் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க, போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி. புவனேந்திரன், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை,காத்தான்குடி  மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சர்வமத  தலைவர்கள், போரதீவுப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரிகள்,களுவாஞ்சிக்குடி, போரதீவுப்பற்று, பட்டிப்பளை, ஆரையம்பதி காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,58 சிவில் பாதுகாப்பு அமைப்புகள், இதன்போது கலந்துகொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி பொதுமக்களை குற்றச்செயல்களில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குவதே சிவில் பாதுகாப்புக்குழுக்களின் கட்டாய கடமையாகும்.அதற்காக பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைத்து சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாடு தற்போது இருக்கின்றது.சிவில் பாதுகாப்புக்குழுக்கள் வினைத்திறன் மிக்கதாக அமைந்தால்தான் நாட்டினுடைய பாதுகாப்பு சரியாக இருக்கமுடியும்.இதனால் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாடு கட்டியெழுப்ப முடியும்.

இம்மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,சிங்களவர்கள் வாழும் பிரதேசமாகும்.பௌத்தம்,இந்து,இஸ்லாம் மக்களை பாதுகாப்பது இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கடமையாகும்.சிவில் பாதுகாப்புக்குழுக்களினால் மக்களுக்கும்,நாட்டுக்கும் காத்திரமான சேவைகளை வழங்க முடியும்.அரசுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்போருக்கு எதிராகவும்,இலங்கையின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்போருக்கு எதிராகவும் செயற்படுவதற்கும் கிராமிய சிவில் பாதுகாப்புக்குழுவுக்கு பொறுப்பு இருக்கின்றது.போதைப்பொருளை விற்பனை செய்வோரை தடுப்பதற்கும்,போதைக்கு அடிமையானவர்களை போதையிலிருந்து மீட்டெடுப்பதற்கும்,வருங்கால இளைஞர்,யுவதிகளை போதையிலிருந்து பாதுகாப்பதற்கும் கிராமிய சிவில் பாதுகாப்புக்குழுவுக்கு பொறுப்பு இருக்கின்றது.

இன்று பார்த்தால் பல பெண் சிறுவர்கள் பல இன்னல்களுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வருகின்றார்கள்.சிறுவர்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.சிறுவர்களுக்குரிய அனைத்து பாதுகாப்புக்களையும் நாம் வழங்க வேண்டிய பொறுப்பு இன்று ஏற்பட்டுள்ளது.சிறுவர்களை முறையாக கண்காணித்து அவர்களை பாதுகாப்புடன் கூடிய கல்வியை வழங்குவதற்கு சிவில் பாதுகாப்புக்குழுக்கள் முன்வரவேண்டும்.தாய்,தந்தையற்ற பாதுகாப்பற்ற சிறுவர்கள் இப்பிரதேசத்தில்  இருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஏற்படும் அநியாயங்களை சிவில் பாதுகாப்புக்குழு தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்தமுடியும்.எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சிறுவர்களும் பாதிக்கப்படக்கூடாத நிலைமையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

தாய்,தந்தையற்ற சிறுவர்கள் அவர்களுடைய வயோதிபடைந்த உறவினர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.இளவயது திருமணம்,பொருளாதார கஸ்டம்,வீட்டின் வறுமை,காரணமாக பல சிறுவர்கள் கல்வியை இழந்தும் இருக்கின்றார்கள்.இன்னும் பல சிறுவர்கள் கல்வியை தொடர்வதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றது.அவ்வாறானவர்களை சிவில்பாதுகாப்புக்குழு வீடுகளுக்கு தேடிச்சென்று அவர்களை மீண்டும் பாடசாலைக்கு இணைத்து கல்விகற்க முயற்சிக்க வேண்டும்.கட்டாயம் 15 வயதுக்கு கீழ்பட்ட நம்முடைய ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கட்டாயக்கல்வியை விருப்பத்துடன் ஊட்டி நாளைய தலைவர்களை உருவாக்கும் தார்மீக பொறுப்பு கிராமிய சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கு இருக்கின்றது.கிராமமட்டத்தில் கல்விநடவடிக்கைகள் எவ்வாறு காணப்படுகின்றது ?,கிராமத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோரை அடையாளப்படுத்தி அவருக்கு எதிராக முறையான சட்டநடவடிக்கை எடுத்தல்,போதைப்பொருள் விற்பனை செய்வோர்,போதைப்பொருளை நீண்டதூரத்திற்கு கடத்திச்செல்வோர்,போதைப்பொருளை பாவித்து அரசசொத்துக்கும்,மக்களின் சொத்துக்கும் சேதப்படுத்துவோரை அடையாளப்படுத்தல்,குற்றச்செயலில் ஈடுபடுவோரை கண்காணித்தல்,ஆறுகள் குளங்களில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை மேற்கொள்ளுவோர்,மண் அகழ்ந்து மண்கடத்தலை செய்வோர்,காடழிப்பை மேற்கொள்ளுவோர் பற்றி சிவில் பாதுகாப்புக்குழுக்கள் வினைத்திறனுடன் செயற்பட்டு அவற்றை தடுத்து நிறுத்தி,கிராமத்தையும் பொதுமக்களையும் பாதுகாப்பது சிவில் பாதுகாப்புக்குழுவின் கடமையாகும்.சிவில் பாதுகாப்புக்குழுக்கள் செயற்படுகின்றது பற்றி நிலையப்பொறுப்பதிகாரிகள் உணர்வுபூர்வமாக செயற்படவேண்டும்.நாட்டில் உள்ள சகல இனமக்களையும் பாதுகாப்பது  பொலிசாருக்கும்,சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கும் இருக்கின்றது எனத்தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: