30 Mar 2021

ஒரு இலட்சம் காணிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நேர்முகப் பரீட்சை.

SHARE

ஒரு இலட்சம் காணிகள்  வழங்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நேர்முகப் பரீட்சை.

ஒரு இலட்சம் காணித்துண்டுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் திங்கட்கிழமை(30)  நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது.

இளம் தொழில் முற்சியாயளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்காக ஒரு இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் தேசிய நிகழ்ச் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று  ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நேர்முகப் பரீட்சை எதிர் வரும் 31ம் திகதி புதன்கிழமை நிறைவடையவுள்ளது.

ஒரு ஏக்கருக்கு குறைவான காணிகளைக் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முதல் கட்டமாக இந்த நேர்முகப் பரீட்சை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இடம் பெற்றது.

இதில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் திருமதி எஸ்.பி.எம்.நவாஸ், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், விவசாய போதானிசிரியர் மற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் இதன் போது நேர்முகப்பரீட்சை நடாத்தினர்.காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 2872 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: