28 Feb 2021

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்க தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை.

SHARE

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்க தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை.

வரப்போகின்ற கிழக்கு மாகாண சபைக்கான  தேர்தலில் அம்மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக இரா. சாணக்கியனைக் களமிறக்கும் ஆலோசனை இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்  சனிக்கிழமை 27.02.2021 வவுனியாவில் இடம்பெற்றபோது இந்த ஆலோசனையை  நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் முன்வைத்துள்ளார். அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கினால்  அவரை முஸ்லிம் மக்களும்  ஆதரிப்பார்கள் என்பதாலேயே இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த யோசனைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா. சிறிநேசன் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், கே. சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி. தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரீ. சரவணபவன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: