24 Feb 2021

அரைகுறையாக காணப்படும் வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அதிகாரிகளுடன் ஆராய்வு.

SHARE

அரைகுறையாக காணப்படும் வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அதிகாரிகளுடன் ஆராய்வு.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டதில் (I PROJECT)  காணப்படக்கூடிய காலதாமதம் காரணமாக மிகவும் முக்கியமான வீதிகள் அரைகுறையாக காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்த வீதிகளின் புணரமைப்புக்கான காலதாமத்திற்கு காரணங்களை கண்டறிந்து அதற்கான வேலைத்திட்டங்களை துரிதபடுதுவதற்கான ஒன்றுகூடல் செவ்வாய்கிழமை(23) ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தினுடைய (I ROAD)  கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ்வொன்றுகூடலை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தார்.

குறிப்பாக இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் சிரேஷ்ட பொறியியல் ஆலோசகர் ஜென் ரோமர் மற்றும் இவ் வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்துக்கான திட்டப் பணிப்பாளர் .பத்மராஜா மற்றும் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி வீதி அபிவிருத்தி திணைக்களத்தினுடைய திட்டப் பணிப்பாளர் கருணைநாதன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி.வன்னியசிங்கம், திட்ட முகாமையாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளடங்கலாக ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டதில் (I PROJECT)) காணப்படக்கூடிய காலதாமதங்களை இனிமேலும் எற்படுத்தாது  மிகவிரைவில் இத்திடங்களை முன்னெடுக்குமாறு இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.






SHARE

Author: verified_user

0 Comments: