18 Feb 2021

6000 கிலோவுக்கு மேல் பதுக்கி வைத்து விற்பனை செய்த கழிவு தேயிலை விசேட அதிரடிப்படையினரால் கண்டு பிடிப்பு--சுற்றிவளைப்பில் பெருமளவுடி தேயிலை மீட்பு களஞ்சியசாலைக்கும் சீல்

SHARE

6000 கிலோவுக்கு மேல் பதுக்கி வைத்து விற்பனை செய்த கழிவு தேயிலை விசேட அதிரடிப்படையினரால் கண்டு பிடிப்பு--சுற்றிவளைப்பில் பெருமளவுடி தேயிலை மீட்பு களஞ்சியசாலைக்கும் சீல்.

ட்டக்களப்பு காத்தான்குடியில் தேயிலை தூள் விற்பணை செய்யும் வியாபார நிலையமொன்றை புதன்கிழமை(17)  6000  கிலோவுக்கு மேல் பதுக்கி வைத்து விற்பணை செய்ததாக கூறப்படும் கழிவு தேயிலை கண்டு பிடித்து கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தேயிலை தூள் விற்பனை செய்யும் இந்த வர்த்தக நிலையத்தில் கழிவு தேயிலை மற்றும் மனித பாவணைக்குதவாத தேயிலை தூள் விற்ணை செய்வதாக விஷேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலையடுத்து விஷேட அதிரடிப்படையினரும் காத்தான்குடி சுகாதார அதிகாரிகளும் குறித்த தேயிலை தூள் விற்பணை நிலையத்தை நேற்றிரவு சுற்றிவளைத்து   அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரேமரட்ண, கல்முனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகார் பொலிஸ் பரிசோதகர் ரத்ணாயக்கா, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எல்.எம்.நபீல், காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் .எல்.எம்.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர் .எல்.ரஹ்மத்துல்லா, உட்பட விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டதுடன் பரிசோதனையிலும் ஈடுபட்டனர்.

இதன் போது 5000 கிலோவுக்கு மேல் காணப்பட்ட கழிவு தேயிலை பக்கட்டுக்களுக்கு சீல் வைத்ததுடன் குறித்த வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினையும் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தேயிலை அபிவிருத்தி சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தேயிலை தூளை களஞ்சியப்படுத்தியிருந்த கழஞ்சிய நிலையத்துக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.






SHARE

Author: verified_user

0 Comments: