15 Feb 2021

இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடடி பண்டல்கள் பறிமுதல் மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை.

SHARE

(பிரபு) 

இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடடி பண்டல்கள் பறிமுதல் மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை.

மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பண்டல்கள்  மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில்  தொடர்புடையவர்களை கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகின்றனர்.

நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து மூக்கு பொடிகள் இலங்கைக்கு கடத்த இருந்த சம்பவம் உளவுத்துறை மற்றும் கடலோரா பாதுகாப்பு குழும அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை  குயவன் தோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு மூக்கு பொடி பண்டல்கள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்க்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து வேதாளை கடற்பகுதியில்  ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது வேதாளை குயவன் தோப்பு கடற்கரையில்  சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்ய முற்பட்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் இரண்டு பண்டல்களை கடற்கரையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றனர். இதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெரிய பண்டல்களை கை பற்றாமல் கடத்தல்காரார்கள் மீண்டும் அந்த பண்டல்களை எடுக்க வந்தால் அவர்களை பிடிக்க கடற்கரையில் சுங்கத்ததுறை அதிகாரிகள் இரவு முழுவதும் மறைந்திருந்தனர்.

அதிகாலை வரை பண்டல்களை எடுக்க யாரும் வராததால் கடற்கரையில் கிடந்த  2 பெரிய  பண்டல்களை கைபற்றிய மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள்; மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு  எடுத்து வந்தனர். கைப்பற்றப்பட்ட 2 பண்டல்களில் 100 அட்டைபெட்டிகளில் சுமார் 30 கிலோ  மூக்கு பொடிகள் இருந்துள்ளது.

மேலும் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் தப்பி சென்ற  இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை மண்டபம் கடலோர காவல் குழுமம் மற்றம் உளவுத்துறை அதிகதாரிகள் கடற்கரை ஓர கிராமங்களில் தேடி வருகின்றனர்.

 




 

SHARE

Author: verified_user

0 Comments: