31 Jan 2021

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்கில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன்.

SHARE


கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்கில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதுகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன்.

பேலியக்கொட மீன்சந்தை கொத்தணி கொவிட் தொற்று காரணமாக தற்போது வரையில் கிழக்கு மகாணத்தில் 2404 பேர்கள் மொத்தமாக தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேலும் கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் 19 பேர் கொவிட் தொற்று உள்ளவர்களாக அடையாயம் காணப்பட்டுள்ளாதோடு கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 2 மரணங்கள் கல்முனை பிராந்தியத்தில் பதிவாகியுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, கிண்ணியா, காரைதீவு, அம்பாறை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, குச்சவெளி, ஆகிய சுகாதார பிரிவுகள் தொடர்ந்து சிவப்ப வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற இந்நிலையில் 2082 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து அவர்களது வீடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.  மொத்தமாக 16 மரணங்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 466 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 588 நபர்களும், கல்முனை பிராந்தியத்தில் 1208 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 143 பேரும், தொற்றுள்ளவர்களாகவும் மொத்தமாகவும், 2404 நபர்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் 9 வைத்தியசாலைகள் கிழக்கு மாகாணத்தில் கொவிட்  சிகிச்சை நிலையங்களாக செயற்பட்டு வருகின்றன. பேலியகொட மீன்சந்தை கொத்தணி தொற்றின் பிற்பாடு இந்த வைத்தியசாலைகளில் இதுவரையில் 3690 நபர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன. தற்போது ரையில் இந்த வைத்தியசாலைகளில் 375 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனார்கள்.

இந்த நிலையிலும் கொவிட் தொற்றினுடைய தாக்கம் ஆங்காங்கே மக்களிடையே அதிகரித்து வருகின்றன. இருப்பினும், மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது. காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலும் ஒரு கிராம சேவையாளர் பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. எமக்கு சில இடர்பாடுகள் வந்தாலும், இராணுவத்தினர், மற்றும் பொலிசாரின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தில் மேலும் கொவிட் தொற்று பரவாமலிருக்க எமது சுகாதாரத்துறை ஒரே நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம்.

காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது நகைப்புக்குரிய விடையமாகும். தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் முழு அதிகாரத்தையும் கொண்டவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகும். ஆவரின் கிழுள்ள எவராலும் அச்சட்டத்தை மீறமுடியாது. எனவே காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அது வந்ததும்தான் காத்தான்குடி பிரதேசத்தின் பகுதிகள் விடுவிப்பதா என்பது தொடர்பில் குறிப்பிட்ட 3, 4 நாட்களுக்குள் முடிவெடுக்கவுள்ளோம். எமக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டோருக்கும், பல தடைகள் வந்தாலும், எமது நோக்கும் நிறைவேறும் நாம் செயற்பட்டுக் கொண்டே இருப்போம்.

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்கில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. இதுவரையில் கிழக்கில் 2767 நபர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சுகாதார உத்தியோகஸ்த்தர்களாவர். இதுவரையில் இந்த தடுப்பூசியால் எதுவித பக்கவிளைவுகளும், ஏற்பட்டதாக பதிவாகவில்லை. எனவே இந்த தடுப்பூசி ஒரு பாதுகாப்பானது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: