28 Jan 2021

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

SHARE

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை சபையின் வெளிப்படைத் தன்மை இன்மையினை காட்டும் வகையிலும், ஜனநாயகத்தை முற்றாக மறுதலிக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளதாக பிரதேச பொதுமக்களும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் குற்றம்சாட்டி வந்தனர்.

2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாதாந்த சபை அமர்வு புதன்கிழமை (27) காலை 10.30 மணியளவில் சபையின் தவிசாளர் .எம்.நௌபர் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது மாதாந்த சபை அமர்வினை ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை

இதனை அடுத்து பிரதேச சபை உறுப்பினர் எம்..ஹமீத் மௌலவி ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால்

சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பிரதேச சபை உறுப்பினராக இருந்து கொண்டு தாம் ஊடகவியலாளர்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்வதற் கமராவை கையில் ஏந்திய வண்ணம் சபை அமர்வில் கலந்து கொண்டதாக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்.

இதன் போது அடுத்த மாத சபை அமர்வில் இருந்து ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு அனுமதிப்பதற்கான ஏகமனதான சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் .எம்.நௌபர் குறிப்பிட்ட அவர் சில மாத காலமாக ஊடகங்கள் அனுமதிக்கப்படாத காரணம் குறித்து சபையின் தவிசாளர் .எம்.நௌபரும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.









SHARE

Author: verified_user

0 Comments: