14 Jan 2021

எருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.

SHARE

எருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் கணனி மயப்படுத்தல் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில்; மட்டக்களப்பு எருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர். பீ. பீதிலகஸ்ஸ்ரீஅவர்களினால் சம்பிரதாயபூர்வமாக  செவ்வாய்கிழமை(12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

19000  பயனாளிகளை கொண்டு இயங்கும் எருவில் சமுர்த்தி வங்கியானது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பகுதியில் அதிகூடிய சமுர்த்தி பயனாளிகளை கொண்டு இயங்கும் சமுர்த்தி வங்கியாகும். சமுர்த்தி வங்கி செயற்பாட்டினை உத்தியோகத்தர்களுக்கும் பயனாளிகளுக்கும் இலகுவாக அமைகின்ற வகையிலே இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கையில்இலங்கையில் எல்லா பாகங்களிலும் சமுர்த்தி வங்கிகளானது கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இச்செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவரப்படுகின்றது. சகல சமுர்த்தி பயனாளிகளும் வறுமை எனும் நிலையிலிருந்து மீள வேண்டும் எனும் நோக்குடனே ஜனாதிபதி செயலணி பல்வேறு செயற்றிட்டங்களை சமுர்த்திக்கூடாக முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையிலே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கூடாக பணிகள் நடைபெற்று வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. .பாக்கியராஜா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ். ஏம்.பஸீர் மாவட்ட தலைமை முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் மண்முனை தென் எருவில் பற்று தலமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், மண்முனை தென் எருவில் பற்று முகாமைத்துவ பணிப்பாளர் கந்தையா உதயகுமார், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பாலிப்போடி துரைராஜசிங்கம், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
















 

 


SHARE

Author: verified_user

0 Comments: