3 Jan 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் வைத்தியதிகாரிகளினால் கொவிட் தடுப்பு விழிப்புனர்வு செயற்திட்டம்.

SHARE

தனிமைப்படுத்தப்பட்டுள்ள  காத்தான்குடியில் வைத்தியதிகாரிகளினால்  கொவிட் தடுப்பு விழிப்புனர்வு செயற்திட்டம்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் கொவிட் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை (02) இரவு  காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் இடம் பெற்றது. காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகம் காத்தான்குடி வைத்தியர்கள் ஒன்றியம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு செயலமர்வை  ஏற்பாடு செய்திருந்தன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எல்.நபீல் தலைமையில் நடைபெற்ற இந்கிகழ்வில் எதற்காக காத்தான்குடி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அதிலிருந்து விடுபட நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியதிகாரி டாக்டர் சிப்லி ஹயாத்  விளக்கமளித்தார். அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனை என்றால் என்ன அதன் நம்பகத்தன்மை பற்றியும் அண்டிஜன் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் அஸ்மி ஹசன் விளக்கி கூறினார்.

களுவாஞ்சிகுடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நளீரா கொரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற விளக்கங்களை தெளிவூட்டினார். காத்தான்குடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் தனிமைப்;படுத்தல் காலத்;தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாகவும் இதற்காக பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் சிவில் சமூக பிரதி நிதிகளின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.













SHARE

Author: verified_user

0 Comments: