20 Jan 2021

கெவுளியாமடுவில் பகுதியில் காடுகளை வெட்டி காணிகளை அடைப்பதற்கு எதிராக கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்.

SHARE

கெவுளியாமடுவில் பகுதியில் காடுகளை வெட்டி காணிகளை அடைப்பதற்கு எதிராக கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெவுளியாமடுவில் பகுதியில் காடுகளை வெட்டி காணிகளை அடைப்பதற்கு எதிராக கொக்கட்டிச்சோலையில் கண்டனப்போராட்டம் புதன்கிழமை (20) இடம்பெற்றது.

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 ஏக்கர் காணிகள் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதோடு.

படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது இங்குள்ள கால்நடைகள் அக்குறித்த பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்படடு வருவது ஆண்டாண்டு காலமாக இரந்து வருகின்றது.

தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அக்குறித்த பகுதியில் சிலர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறித்து இதனை வண்மையாக கண்டித்து  கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து பேரணியுடன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சென்று பண்ணையாளர்களர் பிரதேச செயலாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

குறித்த இக்கண்டன பேரணியில் தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) முன்னாள நாடாளுமன்ந உறுப்பினர் பாக்கியச் செல்வம் அரியநேத்திரன், மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள், பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

 








 

SHARE

Author: verified_user

0 Comments: