26 Jan 2021

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் டெங்கில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.

SHARE

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் டெங்கில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் டெங்கில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு வைரஸ் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை மற்றும் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டங்கள் தவிசாளர் .எம்.நௌபர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரத் துறையினரின் வழிகாட்டலுக்கு அமைவாக முதல்கட்டமாக பாடசாலைகள் முன்பள்ளிகள் ,பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய இடங்களுக்கு  தொற்று நீக்கி விசிறப்பட்டதுடன் புணானை, வாகனேரி, முள்ளிவட்டவான் போன்ற கிராமங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்பூட்டல்கள் மக்களுக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின்  தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: