10 Jan 2021

முனைவர் முருகு தயாநிதி அவர்களின் “பழந்தமிழில் கல்விச் சிந்தனை” எனும் நூலுக்குக்கு விருது.

SHARE

முனைவர் முருகு தயாநிதி அவர்களின்பழந்தமிழில் கல்விச் சிந்தனைஎனும் நூலுக்குக்கு விருது.

கல்வியியலாளர் முனைவர் மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரை பெருநிலப்பரப்பின் அம்பிளாந்துறைக் கிராமத்தைச் சேர்ந்த முருகு தயாநிதி அவர்கள் எழுதி அறிவியலும் தொழிநுட்பமும் என்ற துறையில்பழந்தமிழில் கல்விச் சிந்தனைகள்என்ற நூல்களுக்கு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள்  திணைக்களம், சிறந்த விருதினை வழங்குவதற்காகத் தெரிவு செய்து வெளியிட்டுள்ளது.

 முனைவர் முருகு தயாநிதி தனது ஆரம்ப இடைநிலைப் பள்ளிக் கல்வியினை மட்.அம்பிளாந்துறைக் கலைமகள் மகாவித்தியாலயத்தில் பயின்ற அவர், உயர் தரக் கல்வியினைக் மட்.குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் நிறைவு செய்துபேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத்  தரிவு செய்யப்பட்டு, அங்கு பல பட்டங்களையும் நிறைவு செய்திருந்தார். அப்பல்கலைக கழகத்தில்  BA, MAP, MA, MPhil பட்டங்களையும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் Med பட்டத்தினையும், திறந்த பல்கலைக் கழத்தில் கல்வி டிப்லோமாவையும் (PGDE) தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் பயிற்சினையும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் (Ph.D) பட்டத்தினை நிறைவு செய்துள்ளார்.

1998ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று 11 வருடம் சேவை செய்தார். பின்னர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்கள் பணியாற்றினார்அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு தொடக்கம், தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களராகப் பணியாற்றுகின்றார். இடைநிலை பாடசாலை மாணவர்களுக்கான, தமிழ் மொழிகான செயற்றிட்டத் தலைவராக இருந்து வரும் இவர் அத்துறையில் பல சேவைகளை ஆற்றுகின்றார். அந்த நிறுவகத்தில் கல்வி மாணிக் கற்கையினைத் தொடர்கின்ற மாணவர்களுக்கான விரிவுரையாளராகவும், வேறு பல பணிகளையும் கற்பித்தல் கற்றலுக்காக ஆற்றி வருகின்றார். மேலும், கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவுடன் இணைந்து, மாகாண மட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சியளித்தல், அதேபோல் இரண்டாம்மொழிசிங்களம் மற்றும் தமிழ் பிரிவினருடன் இணைந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தல், இருமொழித் திணைக்களத்தினருடன் இணைந்து பணியாற்றல், பிரிவோனா மாணவர்களுக்கான ஆசிரியர் வழிகாட்டி தயாரித்தல், பாடப் புத்தகங்களின் பதிப்பாசிரியராகவும் பணி புரிந்து வருகின்றார். ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரித்தல், கல்வியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் தயாரித்தல், போன்ற பணிகளையும் ஆற்றி வருகின்றார்.

பாடல் வரி எழுதும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். படுவான்கரைக்கு வந்துபார் தம்பி, அதிசயத் தெய்வம், தோரணம் ஆகிய பாடல்களுக்கான வரிகளை எழுதியதோடு, அவை இறுவட்டாகவும் வெளிவந்துள்ளன. அத்தோடு கல்வியின் பெருமைநடனம், உழைத்தால் உயரலாம்நாடகம், பெண்ணின் பெருமைநாடகம், சீரழித்தது சின்னத்திரைநவீன நாட்டுக் கூத்து, காசித்தம்பி டாக்கடர்நவீன நாட்டுக் கூத்து, நொண்டிதென்மோடிக் கூத்து (சுருக்கி எழுதியமை), அவுஸ்ரேலியப் பயணம்நவீன நாட்டுக் கூத்து, வெளிநாட்டு மசாலாநடனம், சிவன்னோயில் வரலாறு  – வடமோடிக் கூத்து, சிவனாரின் பெருமைகரகம், மாரியம்மன் பெருமைகும்மி, அபிமன்யுநாடகம், கிருஷ்ணன் தூதுநாடகம், தீர்ப்புநாடகம் போன்ற ஆக்கங்களையும் எழுதி நடித்து மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்தி வருகின்றார்.

சிறந்த நடிகராக வலம்வரும் இவர், 1997 –ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழத்தில் இடம் பெற்ற கோதுடைக்கும் குஞ்சுகள் எனும் நாடகத்தில் நடித்து மூன்றாம் பரிசு பெற்றவர். தொடர்ந்து 1998 - ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற ஓரங்க நாடகத்தில் நடித்து மூன்றாம் பரிசும் பெற்றார். இன்றும் நடிப்புத்துறையைக் கைவிடாமல் தொடரும் இவர் கலைப்புக்கள் கலைக்கழகத்தின் தலைவராக இருந்து அதனை வழிநடத்துகின்றார்.

 இந்தக் கழகம் இவ்வருடம் 31 வது வருடத்தினைப் பூர்த்தி செய்கின்றது. இவர் 35 வருடத்திற்கு மேலாக ஆண் வேடம், பெண்வேடம் என்று பல வேடங்கள் கொண்டு நடித்து வருகின்றார்.

சர்வதேச, தேசிய மட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதி சமர்ப்பித்துள்ளார். அக்கட்டுரைகள் யாவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றிலும் பழந்தமிழில் உள்ள கல்விச் சிந்தனைகள் பற்றிய கட்டுரைகள் பல சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாசிரியர் பண்டைத் தமிழில் மூழ்கும் கல்விதான் இன்றைய கல்வி என்று ஆதாரத்துடன் நிறுவியுள்ளமை இவருடைய ஆய்வின் ஆழத்தினைக் காட்டி நிற்கின்றது. பொதுவாக இத்தகைய ஆய்வுக் கட்டுரைகள் யாவும் ஒரு புதிய செய்தியுடன் முன்வைக்கப்படுவதனைக் கண்டுகொள்ள முடிகின்றது. அத்தோடு, பல கருத்தரங்குகளில் முதன்மை உரையினையும் கருத்துரையி னையும் வாழ்த்துரையினையும் வழங்கியதோடு, கருத்தரங்கத் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

 இவருடைய ஆய்வு முயற்சியினையும் ஏனைய செயற்பாடுகளையும் பாராட்டி அவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலக தமிழிசைத் தூதுவர் விருதினையும்இ பாவநாசத் திருவளு்ளுவர் கல்லூரிதமிழ்ச் சுடர் விருதினையும, கரந்தை தமிழ்ச் சங்கம் தமிழ் முகில், தமிழ் ஒளி ஆகிய விருதினையும்தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சிறந்த பண்பாட்டாளருக்கான விருதினையும், பண்பாடுகள் தொடர்பாக சிறந்த பங்கு பற்றாளர் விருதினையும், பட்டிப்பளை கலை இலக்கியப் பேரவை மகிழை மகேசன் ஞாபகார்த்த விருதினையும், மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம் சிறந்த ஆசிரியருக்கான விருதினையும்கிழக்குமாகாண கல்வி அமைச்சு சிறந்த பாடசாலை அதிபருக்கான விருதினையும் வழங்கி இருந்தது.  

இவர் சமுகத்திற்குப் பல சேவைகளை ஆற்றி வருகின்றார். குறிப்பாக அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகத்தின் செயலாளராகவும், ஸ்ரீ சித்தி விநாயகர் முத்துமாரியம்மன் ஆலய பொருளாளர் மற்றும் செயலாளராகவும், பாரதி இளைஞர் கழகத் தலைவராகவும், இந்து இளைஞர் மன்றச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட விபுலாநந்தா நுற்றாண்டு சபை உறுப்பினராகவும், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவகம் 2019ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய இசை மாநாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாகவும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2020 ஆண்டு நடத்திய 14வது மாநாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாகவும், அதன் உறுப்பினராகவும், Asian Pacific School Psychology Association 2020 -ஆண்டு இலங்கையின் தேசிய கல்வி நிறுவகத்தில் நடத்தும் சர்வதேச மாநாட்டுக்கான கருத்தரங்கச் செயலாளராகவும், அந்த அமைப்பின் உறுப்பினராகவும் இருந்து, சர்வதேச மட்டப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்நூலாசிரியர் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அவை பல்வேறு துறைகள் சார்ந்தவை. அம்பிலாந்துறை, கண்டிராஜன் ஒப்பாரி என்பன வரலாற்றுடன் தொடர்பு பட்டவை, இயல்பு மீறிய குழந்தைகள், பழந்தமிழில் கல்விச் சிந்தனை, இலகு முறையில் தமிழ் கற்பித்தல் என்பன கல்வியை அடிப்படையாகக் கொண்டவை, இராமர் அம்மானை, வள்ளியம்மன் அம்மானை, ஊஞ்சல் விளையாட்டு, வள்ளியம்மை கூத்து, சூரசம்மாரக் கூத்து, வள்ளியம்மை கூத்து, என்பன தமிழியலுடன் சம்பந்தப்பட்டவை, படிக்கும்போது, கிராமியக் கலைகள், படுவான்கரைக்கு வந்துபார் தம்பி, கரோணா  என்பன கவிதை நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தகைய நூல்களில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள்  திணைக்களம், அறிவியலும் தொழிநுட்பமும் என்ற துறையில்பழந்தமிழ் கல்விச் சிந்தனைகள்என்ற நூலுக்கு சிறந்த விருதினை வழங்குகின்றது.




 

SHARE

Author: verified_user

0 Comments: