3 Jan 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தானகுடியில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை

SHARE

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தானகுடியில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை.

தீவிர கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெள்ளிக்கிழமை (01) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் தொற்று நீகும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை (02) காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆறு பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்ததையடுத்து பொலிஸ் நிலையங்களில் பீசீஅர்; பரிசோதனைகள் மேற்கௌ;ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காத்தான்குடியில் அண்மையில் 50 போர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் வழிகாட்டலில் சனிக்கிழமை (02) காத்தான்குடி பொலிஸ் நிலையம் முழுமையாக கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: