11 Jan 2021

நீதியும் தர்மமும் வெல்லும் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

நீதியும் தர்மமும் வெல்லும் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

ஏப்ரல் 21 சீயோன் தேவாலய குண்டு வெடிப்பில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரியின் உடலை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கள்ளியங்காடு மயானத்தில் புதைத்தமையை எதிர்த்தமைக்காக பொலிசாரால்  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக  தொடுக்கப்பட்ட வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (11) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்….

 கடந்த ஏப்ரல் 21 அன்று மேற்கொண்ட  மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமாக தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டடமை அனைவரும் அறிந்த விடையம். அதன்போது சியோன் தேவலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட அந்த பயங்கரவாதியின் உடலை மட்டக்களப்பு நகரிலே அமைந்துள்ள கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு மேற்கொண்டபோது, எமது மக்களின் மயானத்தில் அந்த பயங்கரவாதியின் உடலைப் புதைக்க வேண்டாம் என மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்களும் அவ்விடத்திற்குச் சென்று மக்களுடன் இணைந்து குரல் கொடுத்தோம்.

 அப்போது பொலிசார் எம்மைப் பலமாகத் தாக்கினார்கள். அதில் பெண்கள் என்றும் பாராமல் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டனர். அதன்போது செல்வி மனோகரன், சி.அனோஜன், சுசிகலா, யோ.றொஸ்மன், அதிலே காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் அவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் என்னையும் சேர்த்து 5 போருக்கு எதிராக பொலிசார் வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள்.

எம்மைப் பொறுத்தளவிற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்பெயரில் அந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகம் கள்ளியங்காடு இந்துமயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. ஆகவே அந்த மக்கள் போராட்டம் வெற்றிபெற்றது. ஆனாலும் நாம் 2019 இதிலிருந்து தொடற்சியாக வழக்கிற்கு வந்து செல்கின்றோம். தற்போது கொவிட் - 19 சூழல் காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி மீண்டும் வழக்கிற்குரிய திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எம்மைப் பொறுத்தளவிற்கு நாம் மக்களோடு மக்களாக நின்று களத்திற் நின்று செயற்பட்டோம் அதனால் நாம் அதிலே வெற்றி பெற்றுள்ளோம். இருந்த போதிலும் பொலிசார் எம்மீது பொய்யான குற்றத்தைச் சுமதி இந்த வழக்கைத் தொடுத்திருக்கிற்கார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் நீதியும் தர்மமும் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: