29 Jan 2021

வவுணதீவு காஞ்சிரங்குடா கிராமத்தில் 17.70 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் இன்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

SHARE
வவுணதீவு காஞ்சிரங்குடா கிராமத்தில் 17.70 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் இன்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபையின் திட்டப் பொறியியலாளர் கே.பிரதீபன்,வவுணதீவு பிரதேசசெயலாளர் எஸ்.சுதாகரன்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் திருமதி மங்களா சங்கர் ,பொதுமக்கள் உட்பட பலர் கொண்டார்கள்.

17.70 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் அமைக்கப்படவுள்ள குடிநீர் இத்திட்டத்தினால் காஞ்சிரம்குடா கிராமத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் நன்மையடையவுள்ளது.

இதுபோன்று எதிர்வரும் காலங்களில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இந்த குடிநீர் விநியோகத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதற்க்கான திட்டமுன்மொழிவினை கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஅவர்களிடமும் கௌரவ பிரதமர் அவர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“நீரின்றி அமையாது உலகு” என்கின்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர், நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் பங்களிப்புடன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட “பிரஜா ஜல அபிமானி” என்கின்ற நாடு பூராகவும் ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் கொண்டுவரப்பட்ட வவுணதீவு காஞ்சிரங்குடா பிரதேசத்திற்கான பாதுகாப்பான குடிநீர் வசதி திட்டத்தினை  இன்று திங்கட்கிழமை(25) பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை- சந்திரகாந்தனால்  தலமையில் ஆரபித்து வைக்கப்பட்டது.









SHARE

Author: verified_user

0 Comments: