26 Jan 2021

வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவில் 15000 இற்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

SHARE

வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவில் 15000 இற்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்..ரசீட் தெரிவித்தார்.

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இம்முறை 21 ஆயிரத்தி 72 ஏக்கர் பெரும்போக நெற்பயிற்செய்கை 7200 விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் முதல் மட்டக்களப்பில் பெய்த தொடர் அடைமழை காரணமாக ஆறு பெருக்கெடுத்தமையினால் சிறிய குளங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்ததனால், அப்பகுதியில், பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டடுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அறுவடைக்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் இப்பாதிப்பு இடம் பெற்றுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் உரிய நஷ்ட ஈடு பெற்று தருமாறும்  கேரிக்கை விடுக்கின்றனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: