11 Dec 2020

காட்டு யானைத் தாக்குதலுக்கிலக்காகி பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கி வைப்பு.

SHARE

காட்டு யானைத் தாக்குதலுக்கிலக்காகி பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு  நிவாரணத் தொகை வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்தில் காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி பெரும் இழப்புக்களைச் சந்தித் கிராம மக்களுக்கு நிவாரணத் தொகை  வெள்ளிக்கிழமை (11) வழங்கி வைக்கப்பட்டது.

கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ப.இம்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், போரதீவுப் பற்று வனப் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் ப.ஜெசாந், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கேசவப்போடி, மற்றும் கிராம பொதுமக்கள் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2020.05.09 ஆம் திகதி நள்ளிரவு வேத்துச்சேனைக் கிராம்திற்குள் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் அக்கிராமத்திலிருந்த பல பயன்தரும் தென்னை மரங்கள், வாழைத் தோட்டங்கள் போன்றவற்றை அழித்திருந்ததோடு வீடுகளையும், உடைத்து சேதப்படுத்தியிருந்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 4 குடும்பங்பங்களுக்கு 247000 ரூபா நிதி பகிர்ந்தழிக்கப்பட்டன. இதில் மிகவும் பலத்த பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு ஆகக் கூடிய தொகையாக 94975 ரூபா வழங்கி வைக்கப்பட்டன. இதுவரைகாலமும் காட்டுயானைகளின் தாக்குதலுக்கிலக்கான குடும்பங்களுக்கு இவ்வாறு அதிக தொகை வழங்கப்படுவதுமில்லை, பாதிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்திற்குள்ளும், நிவாரணங்கள் வழங்கியதும் இல்லை, போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர், மற்றும் வனஜீவராசிகள், பாதுபாப்பு பிரிவினரின் துரித செயற்பாட்டினால் இவ்வாறு காட்டுயானைகளினால் பாதிக்கப்பட்ட தமக்கு விரைவாக பெரியதொரு உதவித் தொகை கிடைத்துள்ளதாகவும், இதற்கு உறுதுணையாகச் செயற்பட்ட பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக வேத்துச்சேனைக் கிராம மக்கள் தெரிவித்தனர்.   












SHARE

Author: verified_user

0 Comments: