22 Dec 2020

மட்டக்களப்பில் தொடர் அடை மழை குளங்களின் நீர் மட்டமும் அதிகரிப்பு.

SHARE

மட்டக்களப்பில் தொடர் அடை மழை குளங்களின் நீர் மட்டமும் அதிகரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரைக்கும் தொடர் அடை மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு நிலையில் சற்றுத் தழம்பல் ஏறட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. பலத்த மழை பெய்து வருவதானால் பாடசாலை மாணவர்கள், உள்ளிட்ட பலரும் பலத்த சிரமங்களுக்குட்பட்டு வருகின்றனர். இதனைவிட அரச, அரச சார்பற்ற உத்தியோகஸ்த்தர்களும் கடமைக்குச் செல்வதிலும் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க மாவட்டத்திலுள்ள பொருமபாலான கிராமங்களின் உள்வீதிகள் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் உள்ளுர் போக்குவரத்துக்கள் செய்வதிலும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகிறனர். குறிப்பாக கரையோரப் பிரதேசங்களை அண்டிய கிராமங்களில் இவ்வாறு மழைவெள்ளம் தேங்கியுய்யதையும் அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில் செவ்வாய்கிழமை (22) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 150.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், ஆகக்கூடியதாக வாகனேரிப் பகுதியில் 214.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் முற்றாக நீர் நிரம்பியுள்ளன. குறிப்பாக களுதாவளை, களுவாஞ்சிகுடி, மகிளுர், குருமண்வெளி, கிராங்குளம், எருவில், வெல்லாவெளி, கோவில்போரதீவு, பெரியபோரீவு, வெல்லாவெளி, பழுகாமம், உள்ளிட்ட பல இடங்களிலலுள்ள சிறிய குளங்கள் மற்றாக நீர் நிரம்பியுள்ளன. 

இதேவேளை மாவட்டத்திலுள்ள பிரதான பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தவகையில்… உன்னிச்சைக் குளத்தில் தற்போது 19 அடி 3 இஞ்சி நீர் மட்டமும், வாகனேரிக் குளத்திரல் 20 அடி 8 இஞ்சி நீர் மட்டமும் அக்குளத்தில் தற்போது 1 அடி 6 இஞ்சி அளவிற்கு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. வெலிக்காகண்டிய குளத்தில் 12 அடி 9 இஞ்சி நீர் மட்டமும், கித்துள்வெவ குளத்தில் 6 அடி 6 இஞ்சி நீர்மட்டமும், காணப்படுகின்றது. உறுகாமம் குளத்தில் 16 அடி ஒரு இஞ்சி நீர் மட்டமும், அக்குளத்தில் 8 அடி உயரத்தில் 2 வாக்கதவுகள் திளக்கப்பட்டுள்ளன. கட்டு முறிவுக்குளத்தில் 12 அடி 6 இஞ்சி நீர்மட்டம் காணப்படுவதோடு  அதில் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. வடமுனைக் குளத்தில் 12 அடி 6 இஞ்சி நீர்மட்டம் காணப்படுவதோடு, புணாணை அணைக்கட்டில் 11 அடி 2 இஞ்சி நீர்மட்டம் காணப்படும் இந்நிலையில் அக்குளத்திலுள்ள 10 வான்கதவுகளும் தற்போதது 10 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பாக நீர்ப்பாசனப் பொறியியலாளர் சந்திரசேகரம் நிரோசன் தெரிவித்தார்.

இந்நிலையில் நவகிரிக்குளத்தில் தற்போது 19 அடி 3 இஞ்சி நீர் மட்டமும் தும்பங்கேணிக் குளத்தில் 12 அடி 3 இஞ்சி நீர் மட்டமும் காணப்படுவதாக இக்குளங்கங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் முருகேசு பத்மதாஸன் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் செவ்வாய்கிழமை (22) மரணணமடைந்த ஒருவரை சேமக்காலையில் புதைக்க முடியாத அளவிற்கு குளிவெட்ட வெட்ட நீர் ஊறிக் கொண்டே இருந்துள்ளது. இந்நிலையிலும், பைகளில் மண் மூட்டைகள் கட்டி பிரேதப்பெட்டியின்மேல் வைத்தே மிகுந்த சிரமத்தின் மத்திக்கத்தில் பிரேதத்தை உஙவினர்கள் அடக்ககம் செய்துள்ள சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



















SHARE

Author: verified_user

0 Comments: