6 Dec 2020

களுவாஞ்சிகுடி பொலிசார் ஒருவருக்கும், வெல்லாவெளியில் பொதுமகன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

SHARE

களுவாஞ்சிகுடி பொலிசார் ஒருவருக்கும், வெல்லாவெளியில் பொதுமகன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொரனா தொற்றுக்கள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி  ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சை பெற்றுவந்தபோதே அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தருக்கு. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திலிருந்த 121 பொலிசாருக்கம் ஞாயிற்றுக்கிழமை (06) அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏதுவித பொதுமக்கள் சேவைகளும் இடம்பெறவில்லை. அங்கிருந்த பொலிசார் அனைவருக்கும் அண்டிஜன் பரிசோதனைகள் றேம்கொள்ளப்படும், இந்நிலையில் திங்கட்கிழமை(07) முதல் பொதுமக்கள் சேவையினை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முன்நெடுப்பதற்காக வேண்டி மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்திலிருந்து பிறிதொரு பொலிஸ் குழு வொன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு வரவளைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் களூவஞ்சிகுடி ஆதார வைத்தியாசாலை வளாகம், பொலிஸ் நிலையம், குறித்த பொலிசார் சிகிச்சை பெற்று வந்த விடுதி என்பன கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன, ஞாயிற்றுஞக்கிழமை குறித்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அத்துடன் வைத்தியசாலையில் விடுதியில் இருந்து சிகிச்னைசபெற்று வரும் நோயளர்களையும் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி சுகாதார பிரிரிவைச் சேர்ந்த பொதுமகன் ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (06) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார். குறித்த நபர் கொழும்புக்குச் சென்று வீடு திரும்மிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையையடுத்து குறித்த நபருக்கு கொரோனோ தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதையிட்டு மக்களிடையே பீதி நிலவி வருகின்றமை அவதானிக்க முடிகின்றது.



























SHARE

Author: verified_user

0 Comments: