26 Dec 2020

சுனாமி தாக்கத்தின் 16 வது நினைவு தினம்- மட்டு.மாவட்டத்தில் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

SHARE

சுனாமி தாக்கத்தின் 16 வது நினைவு தினம்- மட்டு.மாவட்டத்தில் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்;டத்தில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப பேணி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

இம்மாவட்டத்தில் சமார் 1800 பேரை பலிகொண்ட நாவலடி,  டச்பார், புதுமுத்துவாரம், திருச்செந்தூர் ஆகிய  பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் மெழுகுதிரி ஏற்றி சமய வழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதான நிகழ்வு நாவலடி நினைவுத்தூபியில் இடம்பெற்றது. இறந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுனாமி தாக்கத்தில் உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர் மல்க உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் சுனாமித் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நான்காவது மாவட்;டம் மட்டக்களப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தில் சுனாமித் தாக்கத்தால் 2800க்கும் அதிகமானோர் பலியானதுடன் 650 பேர் காயமடைந்ததுடன் பலர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. 



























SHARE

Author: verified_user

0 Comments: