1 Dec 2020

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் செயற்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.

SHARE

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் செயற்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் செயற்திட்டம் திங்கட்கிழமை 30.11.2020 மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் முன்னிலையில் விழிப்புணர்வு பதாதைகள் துண்டுப் பிரசுரங்கள் கையேடுகள் என்பனவற்றை காடசிப் படுத்துவதற்காக அவை மாவட்டச் செயலாளரிடம் கையளித்து ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொரோனா தொற்றுக்காலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை என்பதால் இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.


மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் மத்தியில் இந்த விழப்புணர்வு சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பலமான பெண்கள் வன்முறைக்கெதிராக கிளர்ந்தெழும் பெண்கள் வன்முறைகளைத் தகர்த்தெறியும் பெண்கள் வன்முறைகளை அனுமதிக்காத பெண்கள் சட்டம் சார்ந்த அறிவைக் கொண்ட பெண்கள் இன்றே சிறநத்தொரு மாற்றத்தை உருவாக்கப் போகும் பெண்கள் போன்ற தொனிப் பொருள்களில் இவ்வாண்டு செய்றபாட்டு தினங்களை மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு நடத்துகிறது.

நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த் நவரூபரஞ்சனி முகுந்தன் மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மாவட்ட அரசாங்க தகவல் திணைக்கள பெறுப்பதிகாரி வ. ஜீவானந்தன் உட்பட அருவி பெண்கள் வலையமைப்பின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். ‪

மட்டக்களப்பு இலங்கைப் போக்கு வரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் நிலையங்களிலும் மட்டக்களப்பு காந்திப் பூங்கா சதுக்கத்திலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் துண்டுப் பிரசுர விநியோகங்கள் பதாதை காட்சிப் படுத்தல்கள் இடம் பெற்றன.












SHARE

Author: verified_user

0 Comments: