9 Nov 2020

பலருடைய பிற்போக்குதனமான விமர்சனங்களை தவிடுபொடியாக்கி மக்களின் அமோக ஆதரவோடு வெற்றிபெற்று அமைச்சுப் பொறுப்பினைப் பெறமுடிந்தது.

SHARE

(ரகு)

பலருடைய பிற்போக்குதனமான விமர்சனங்களை தவிடுபொடியாக்கி மக்களின் அமோக ஆதரவோடு வெற்றிபெற்று அமைச்சுப் பொறுப்பினைப் பெறமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் பல்வேறு அபிவிருத்தி பிரச்சனைகள் பின்னடைவினை எதிர்நோக்கிய காலகட்டத்திலேயே முற்போக்குசிந்தனையுடனான அரசியற்பயணத்தினை மேற்கொண்டு மத்தியில் ஆளும் தரப்போடு ஒன்றிணைந்து பயணித்து பலருடைய பிற்போக்குதனமான விமர்சனங்களை தவிடுபொடியாக்கி நீண்டகாலத்தின் பின்பு மக்களின் அமோக ஆதரவோடு தேர்தலில் வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மக்களுக்கு சேவையாற்றக்கூடிய இராஜாங்க அமைச்சுப்பொறுப்பினை பெறமுடிந்தது. 

என பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடைவளர்ப்பு, மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்தரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சின் துறைசார்ந்த  செயற்பாடுகளை மக்களின் காலடிக்கே கொண்டுசென்று அப்பிரதேசமக்களின் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளை துறைசார் அமைச்சினூடாக தீர்த்து வைப்பதற்கான தொனிப்பொருளின் அடிப்படையிலேயே மண்முனைப்பற்று பிரதேசத்திற்கான இராஜாங்க அமைச்சின் காரியாலயம் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கிணங்க ஆரையம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை திறந்து வைக்கப்பட்டது. காரியாலைத்தை திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

இந்த இராஜாங்க அமைச்சினூடாக தமிழ் மக்களின் நீண்டகாலப பிரச்சனைகளாகத்திகழும் வேலைவாய்ப்பின்மை வாழ்வாதார பிரச்சனை, போன்றவற்றை படிப்படியாக தீர்த்து வரமுடிகின்றது. அத்தோடு மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலே குடும்பம்தோறும் சுயதொழிலில் வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதனை முன்னிட்டான பாரிய செயற்திட்டங்கள் அதிமேதகு ஐனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களூடைய ஆலோசனைக்கிணங்க அமைச்சரவையின் அனுமதியை பெற்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நீண்டகாலம் தொடரவுள்ள இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக மட்டக்களப்பு தமிழர்களும் எங்களூடாக பயணிப்பதனூடாக தீர்க்கப்படாத பல அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் நிற்சயமாக  தீர்க்கமுடியும் அதற்கான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. 

நாங்கள் முன்பு பயணித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மண்முனைப்பற்று பிரதேசத்தில் அதிகளவான வாக்குகளை பெற்று அதிக வட்டாரங்களை கைப்பற்றிய போதிலும் கட்சியின் தலைமைகளின் பிழையான நடவடிக்கைகள் காரணயாக தவிசாளர் பதவியை இழந்து இன்று எதிர்கட்சியாக திகழ்கின்றது. இந்த நிலைமைகள் தொடரக்கூடாது என்பதற்காகவே மாற்று நிலை அரசியல் நகர்வுகளூடாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியினூடாக தேர்தலில் பயணித்து மக்களின் ஆணையை பெற்று மக்கள் பணியை தற்போது செவ்வனே ஆற்றிவருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சாதாசிவம் வியாழேந்திரன் அவர்களுடைய பிரேத்தியேக செயலாளர் மயூரன் முற்போக்கு தமிழர் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சஞ்சீவ் முற்போக்கு தமிழர் கட்சியின் ஆலோசகர் கலாசார உத்தியோகத்தர் சு.ருபேசன் மற்றும் ஆசிரியர்  நிரூஷன் முற்போக்கு தமிழர்கட்சியின் மண்முனைப்பற்று இணைப்பாளர் தோமஸ் சுரேந்தர்  முற்போக்குதமிழர் கட்சியின் இணைப்பாளர் திவாகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, நீண்டகாலமாக பூர்த்தி செய்யாமலிருக்கின்ற ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்திதருமாறும், அரச உத்தியோகத்தர்கள் பலருடைய இரண்டாம் மொழி தேர்ச்சிக்கான பயிற்சிகளை காத்திரமாக வழங்கிவருகின்ற அரசகருமமொழிகள் திணைக்களத்தின் கிழக்குமாகாண  நிலையத்தினை நிலையான கட்டடத்தில் மண்முனைப்பற்று பிரதேசத்தில் அமைத்துதருவதற்கு ஆவண செய்யுமாறும் பொதுமக்களால் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டன.

  
SHARE

Author: verified_user

0 Comments: