11 Nov 2020

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் சந்திரகாந்தன் எம்.பி திறந்து வைப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் சந்திரகாந்தன் எம்.பி திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில்  புதன்கிழமை (12) நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கினைப்பு (அபிவிருத்தி) குழுவின் இணைத்தலைவராக  சிவநேசதுரை சந்திரகாந்தன்  அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார் இந்த நிலையில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்த மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில் பங்கேற்பதற்காக நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்த நிலையில் அதற்கான அனுமதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

இதனையடுத்து புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்காக காரியாலம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் கருணாகரன், உதவி அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில்......

நீண்ட காலத்திற்கு பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின்  தலைவர் என்ற பொறுப்பை ஏற்று இருக்கின்றேன் குறிப்பாக இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு பெரும் பங்காற்றிய எமது மக்களுக்கு முதலில் நன்றி.

அதேபோன்று தேர்தல் காலங்களில் நாங்கள் மக்களுக்கு பல பணிகளை முடித்து தருவதாக வாக்குறுதிகளை வழங்கித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றோம்.  இந்த அடிப்படையில் இப்பொழுது ஒரு உலகளாவிய ரீதியில் பெரும் சவாலாக இருப்பது கொவிட்-19 இத்தொற்றானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் வந்துள்ளது இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கை தரத்தையும் அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற  பொதுவான கொள்கை திட்டத்திற்கு உழைக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

அதனடிப்படையில் முதலாவதாக கொரோனா தொற்றை தடுத்து மக்களை பாதுகாத்துக் கொண்டு அதனோடு கிராமிய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது எங்களுடைய நோக்கம். அந்தத் திட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்த்திருக்கின்றேன்.

அதேபோன்று நீண்டகாலம் நான் நிர்வாகத்தோடு தொடர்பில்லாததன் காரணமாக இன்று இந்த கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு நிலைமைகளை அவதானித்து எதிர்வரும் 13ஆம் திகதி பெரும் விமர்சனத்தை பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நடத்துவதாக முடிவு எடுத்துள்ளோம்.

அந்தக் கூட்டத்தில் இணைப்பு கூட்டம் என்ற அடிப்படையிலே முடிந்த அளவு 2021 ஆம் ஆண்டு செய்யப் போகின்ற பணிகளையும் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு இருக்கின்ற உடனடியான தேவைகளையும் அவதானித்து அதனை முடித்து கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம் என எதிர்பார்க்கின்றேன் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் கருத்துக்களைத் தெரிவித்தார்.


















SHARE

Author: verified_user

0 Comments: