4 Nov 2020

மாவடிவேம்பு கிராம சேவகர் வீதியை கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்திட்டத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆரம்பித்து வைப்பு.

SHARE

மாவடிவேம்பு கிராம சேவகர்  வீதியை  கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்திட்டத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆரம்பித்து வைப்பு.

நாட்டின் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும்  ஜனாதிபதியின்  திட்டத்திற்கு அமைவாக  மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று மாவடிவேம்பு கிராம சேவகர்  வீதியை  கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்தினை புதன்கிழமை (04) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

நீண்ட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட சுமார் ஒரு கிலோமீற்றர் வீதியானது இராஜாங்க அமைச்சரின் முயற்சியினால் இவ்வாறு கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

இரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ள இவ்வீதிக்கான ஆரம்ப கட்ட  வேலைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு இராஜாங்க  அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் வ.கலைவாணி  மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில்… பல்வேறுபட்ட பிரச்சனைகள் இந்த மக்களுக்கு இருக்கத்தக்கதாக இன்று பல தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்றனர். இவ்வாறு இவர்கள் செயற்படாமல் காலத்திற்கு ஏற்றாற் போல் மக்களின் உண்மையான பிரச்சனைகளை அறிந்து அரசாங்கத்தோடு பேசி இந்த மக்களுக்கு இருக்கின்ற தேவைகளை நிவர்த்தி செய்பவர்களாக மாறவேண்டும்.

நாங்களும் கடந்த காலங்களிலே அவ்வாறானதொரு பிழையான பதியிலே பயனித்ததால்தான் எம்மாலும் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது கடந்த இரண்டரை மாதங்களுக்குள் நாம் எமது மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அதே போல் எல்லைப்புறங்களில் பாதிக்கப்பட்ட 51  கோயில்களுக்கு பிரதமரின் அமைச்சின் ஊடாக  நிதி உதவிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது,  அதுமட்டுமல்லாது ஒரு இட்சம் கிலோமீற்றர் வீதிகளில் சுமார் 25 கிலோமீற்றர்களுக்கு அதிகமான வீதிகளை கொண்டுவந்திருக்கின்றோம், அதேபோல் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை புனரமைக்கின்ர செயற்திட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல கிராமிய விவசாய பாலங்கள் புனரமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: