20 Nov 2020

அரசாங்கம் வழங்கும் மானியப் பசளையை அதிகாரிகள் வழங்குவதில் தாமதம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

SHARE

அரசாங்கம் வழங்கும் மானியப் பசளையை அதிகாரிகள் வழங்குவதில் தாமதம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்டபத்தடி கமநல கேந்திரநிலையத்திற்குட்டபட்ட விவசாயிகள் தமக்கு உரிய நேரகாலத்திற்கு பசளையை அதிகாரிகள் வழங்கவிலலை என வெள்ளிக்கிழமை (20) மண்டபத்தடியில் அமைந்துள்ள கமநல கேந்திர நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம் வயற்காணியின் உறுதிகளை வங்கிகளில் அடகு வைத்து விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள போதிலும், தமக்கு அதிகாரிகளினால் உரிய காலத்தில் பசளை வகைகளை வழங்கப்படுவதில்லை, இதனால் விவசாயச் செய்கை பாதிக்கப்படுவதாகவும், பசளையைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் அதிகாலை ஒருமணி தொடக்கம், அதிகாலை 3 மணிக்கும் வந்து, காத்திருக்கின்றோம், ஆனால் எமக்கு தற்போதைக்கு பசளை வரவிவலை என தெரிவிக்கின்றார்கள்.

அதிகாரிகள் பாரா முகமாக நடந்து கொள்கின்றார்கள்,  இதனால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் கடுந்தொணியில் கதைக்கின்றனர்,  என  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர். 

எனவே உயர் அதிகாரிகள் ஏழை விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் மானிய பசளைகளை உரிய நேர காலத்திற்கு தங்கு தடைகளின்றிப் பெற்றுத்தர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன் வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு வவுணதீவு பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. 









SHARE

Author: verified_user

0 Comments: