9 Nov 2020

பிரதமரின் வேண்டுகோளின்கீழ் மட்டு.மாவட்ட பள்ளிவாயல்களில் கொரோனா நீங்க விசேட பிரார்த்தனை நிகழ்வுகள்.

SHARE

பிரதமரின் வேண்டுகோளின்கீழ் மட்டு.மாவட்ட பள்ளிவாயல்களில் கொரோனா நீங்க விசேட பிரார்த்தனை நிகழ்வுகள்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்பேரில் புத்தசாசன காலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பல பள்ளிவாயல்களில் தற்பேதைய கெரேனா நிலைமை நீங்கி சுமூகமான நிலைமை ஏற்பட விஷேட பிராத்தனை நிகழ்வுகள்  (08.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் இடம் பெற்ற பிராத்தனை நிகழ்வு அப்பள்ளிவாயலின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ரஊப் மஜீத் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிராத்தனையை மெலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி நடாத்தினார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் அப்பள்ளிவாயலின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்;ற பிராத்தனை நிகழ்வில் பள்ளிவாயலின் இமாம் மௌலவி எம்.எஸ்.எம்.அப்துல் காதர் பலாஹி பிராத்தனையை நடாத்தினார்.

புதிய காத்தான்குடி அல அக்ஷா ஜும்ஆப்பள்ளிவாயலில் பள்ளிவாயலின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற பிராத்தனை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் காத்தான்குடி முன்னாள் காதி நீதிபதியுமான மெலவி எஸ்.எம்.அலியார் பலாஹி பிராத்தனையை நடாத்தினார்.

சமூக இடைவெளியைப் பேணி நடைபெற்ற இந்த பிராத்தனை நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் உட்பட பள்ளிவாயல்களின் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை நீங்கி சுமூகமான நிலைமை ஏற்பட விஷேட பிராத்தனை இடம் பெற்றன. 















SHARE

Author: verified_user

0 Comments: