7 Nov 2020

பட்டிப்பளையில் பல கோடி ரூபாய்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்.

SHARE

பட்டிப்பளையில் பல கோடி ரூபாய்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்.

நாட்டில்  ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு  பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிட்குடப்பட்ட  மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி,  கடுக்காமுனை மயான வீதி என்பன தலா ஒரு கிலோமீற்றர் வீதமாக கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் வேலை திட்டத்திட்டங்களை சனிக்கிழமை (07) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

நீண்ட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட சுமார் இரண்டு  கிலோமீற்றர் வீதிகளே  இராஜாங்க அமைச்சரின் முயற்சியினால் இவ்வாறு கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

ஐந்து  கோடியே இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ள இவ்வீதிகளுக்கான ஆரம்ப கட்ட  வேலைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு இராஜாங்க  அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் வ.கலைவாணி  மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடுக்காமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடு ஒன்றினையும் இதன்போது பயனாளியிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்ததுடன், அம்பிளாந்துறை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகளையும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்துவைத்தார். 























SHARE

Author: verified_user

0 Comments: