23 Nov 2020

அரசின் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் 297 வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

SHARE

அரசின் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் 297 வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத் திட்டத்திற்கமைய உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் வீடற்ற ஏழைமக்களுக்காக 297 வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு திங்கட்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கல்லடியிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை காரியாலத்தில் இடம்பெற்றது. இவ்விசேட நிகழ்வில் அதிதிகளாக பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மா. மங்களேஸ்வரி சங்கர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தில் ஏற்கனவே 212 வீடுகளுக்கான கட்டடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை 71 வீடுகளுக்கான முதற்கட்ட காசோலையாக 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டன. மேலும் 14 வீடுகளை அமைப்பதற்கான பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்தில் அமைக்கப்படும் வீடு ஒன்றிற்கு அரசாங்கத்தினால் 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஸ்ட மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

 











SHARE

Author: verified_user

0 Comments: