14 Oct 2020

மட்டக்களப்பு – கொம்மாதுறை ஸ்ரீதேவி அம்மாள் ஆலய திருச்சடங்கு.

SHARE

(RNgh)

மட்டக்களப்பு – கொம்மாதுறை ஸ்ரீதேவி அம்மாள் ஆலய திருச்சடங்கு.
கிழக்கிலங்கையில் பிரசித்து பெற்றதும் இலங்கைத்திருநாட்டில் உள்ள ஒரேஒரு ஸ்ரீதேவி அம்மாள் சக்தி தலமாகிய மட்டக்களப்பு – கொம்மாதுறை ஸ்ரீதேவி அம்மாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு மிகவும் சிறப்பாக செவ்வாய்கிழமை (13) இடம்பெற்றது. 

ஆலய பிரதமகுரு சிவ.ஸ்ரீ.பா.மணிவண்ணன் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பானமுறையில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான திருச்சடங்கினை ஆலய நித்திய குரு, ஆலய உற்சவ குருக்களான  சிவஸ்ரீ.உ.உருத்துரமூர்த்தி குருக்கள் மற்றும் க.ரமணதாசன் குருக்கள் ஆகியோர் சிறப்பான முறையில் நடாத்தியிருந்தனர். 

இம்முறை கொவிட்19 கொரோனா தொற்று காரணமாக சுகாதார முறைகளைப் பின்பற்றும்வகையில் ஆலயத்தில் அடியார்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.

வழமைபோன்றும் இவ்வாண்டின்; ஒருநாள் திருச்சடங்கானது அதிகாலை 04.00 மணிக்கு ஸ்ரீதேவி அம்மாளுக்கு அபிஷேக அலங்கார ஆரதணைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு. பிற்பகல் 12.00 மணிக்கு அம்பாளின் கும்பம் எழுந்தருளலுடன். பிற்பகல் 03.00மணிக்கு அம்பாளின் திருச்சடங்கு ஆரம்பமானது.

நள்ளிரவு 12.00 மணிக்கு விசேட காளபைரவருக்கான பூஜையுடன், அதிகாலை 05 மணிக்கு அம்பாளுக்கு கும்பம் சொரிதலுடன் திருச்சடங்கு நிறைவேறியது. 
 













SHARE

Author: verified_user

0 Comments: