25 Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் கிராம மட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் கிராம மட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு.

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “கிராம மக்கள் மட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் முன்னாயத்த விழிப்புணர்வு” எனும் தொனிப் பொருளில் அமைந்த விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 25.10.2020 இடம்பெற்றது.

சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே. முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாலமீன்மடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் மாவட்ட சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரிகளான பிரதான பரிசோதகர் சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஜி. உதயகுமார் உப பரிசோதகர் பதில் பொறுப்பதிகாரி எஸ். அன்புராஜ்மாவட்ட சமூகப் பாதுகாப்பு பொலிஸ் ஒருங்கிணைப்பாளர் ஜே. நிஜாம்தீன் சமூக பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரீ.எப்.எம். ஸாபீர்  பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரீ. மணிமாறன் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் நிருவாக உத்தியோகத்தர் இந்திரன் ஜெயசீலி பணிப்பாளர் சபை உறுப்பினர் ரஜனி ஜெயப்பிரகாஸ் உள்ளிட்டோரும் இன்னும் பல சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களின் பிரதிநிதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று டெங்கு நோய் தடுப்பு சூழல் பாதுகாப்பு சமூக விரோத செயற்பாடுகளுக்காக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று உட்பட டெங்கு நோய் அபாயம் பற்றிய விழிப்புணர்வுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

















SHARE

Author: verified_user

0 Comments: