7 Oct 2020

முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

SHARE


முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் புதன்கிழமை (07) மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமை குறித்து ஆராயப்பட்டதோடு அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றன.

இதன்போது அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில்......  இலங்கையில் தற்போது நிலவி வரும் கொவிட் தொற்று காரணமாக  குறிப்பாக மினுவங்கொடை, கம்பஹா பகுதிகளில்  ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆராயப்பட்டன.

தற்போது அனைத்து பொதுமக்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடைசெய்ய வேண்டும் அத்தோடு பொது மக்கள் தங்களது தேவைகளுக்காக வங்கி, வைத்தியசாலை, போக்குவரத்து, பொருட்கள் கொள்வனவு செய்தல் போன்ற வேளைகளில் சமுக இடைவெளியை பேண வேண்டும், இவ்வாறு முன்னர் எவ்வாறு கொவிட் பரவலை கட்டுப்படுத்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றினோமோ அது போன்று சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் பொது மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கிடைக்கபெற்ற சுற்றறிக்கை மூலம் சகல பாடசாலைகள், தனியார் வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறத்தலுக்கமைய எமது மாவட்டத்தில் மேலதிக அறிவுறுத்தல் வரும்வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்தது போன்று அது போன்று தற்போது நிலவி வரும் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொது மக்கள் அணைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். 













SHARE

Author: verified_user

0 Comments: