22 Oct 2020

மட்டு மாவட்டத்தில் நவீன தொழில் நுட்ப ரீதியாக மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பு - உதவிப் பிராந்திய முகாமையாளர்.

SHARE

மட்டு மாவட்டத்தில் நவீன தொழில் நுட்ப ரீதியாக மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பு -  உதவிப் பிராந்திய முகாமையாளர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை கடந்த 30 வருடகாலமாக பெருந்தோட்டப் பயிற்செய்கையாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. இம்மாவட்டத்தில ஒன்பதினாயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் மரமுந்திரிகைச் செய்கையின் மூலம் அதிகளவு வருமானத்தைப் பெற்று அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றார்கள். கடந்த யுத்தகாலத்தில் இந்த மரமுந்திரகைச் செய்கை பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்தப் பயிற்செய்கையை நவீன தொழில் நுட்ப ரீதியாக மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

என இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவிப் பிராந்திய முகாமைளாளர் கணேசன் மலைமகள் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு புதன்கிழமை (21) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கையை பெருந்தோட்டமாகவும். வீட்டுத் தோட்டமாகவும், அனைவரும் பயிரிடலாம். அதற்காக எமது மாவட்ட பிராந்தியக் காரியாலயம் வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. அதிலே 3 பிரதான சிரேஸ்ட கள அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் பொதுமக்கள் தினத்தில் நேரடியாகச் சென்று விவசாயிகள் சந்திக்கலாம். அந்த வகையில் எஸ்.தேவராஜன் எனும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, மற்றும் அரையம்பதி, பிரதேசங்களில் கடமையாற்றி வருகின்றார் அவரது தொலைபேசி இலக்கம் 0776910728, 

அதுபோல் கிரான்,  வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, பிரதேசங்களுக்கு பி.சிவநாதன் எனும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கடமையாற்றி வருகின்றார். அவரது தொலைபேசி இலக்கம்  0777033337, இவர்களுடன் தொடர்பு கொண்டு அல்லது  வந்தாறுமூலை வி.சி. வீதியில் அமைந்துள்ள எமது பிராந்திய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து, மரமுந்திரிகைச் செய்கைளில் ஈடுபட விரும்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம். 

வீட்டுத்தோட்டத்தில் ஒன்று தொடக்கம் 10 வரையிலான கன்றுகள் வரைக்கும் நடுகை செய்யலாம். இந்நிலையில் மரமுந்திரிகைச் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக நாங்கள் பல்வேறுபட்ட தொழில் நுட்ப வசதிகளை மேற்கொண்டு வருகின்றோம். உதாரணமாக முந்திரியை விதைகளை நேரடியாக இடைத்தரகர்களுக்கு விற்காமல் அதனை முடிவுப் பொருளாக மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு, மாதர் சங்கங்கள் ஊடகாக விதாதா நிலையங்களில் பதநிடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன. 

அதுபோல் மரமுந்திரிகைப் பயிற் செய்கையை எவ்வாறு நடுகை செய்வது, அதனைப் பாதுகாத்தல், விளைச்சலை அதிகரித்தால் சம்மந்தமாகவும், பிரதேச மட்டத்திலும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றோம். தற்போது அதிக விளைச்சலைத் தரக்கூடிய இனைங்களையும் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றோம். 

மரமுந்திரிகைச் செய்கை ஒரு ஆடம்பரத் தாவரம் என்பதனால் இதன்மூலம் அதிகளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, மரமுந்திரிகைச் செய்கையை ஊக்குவிப்பதற்கு விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம் என அவர் அதன்போது மேலும் குறிப்பிட்டார்.










SHARE

Author: verified_user

0 Comments: