25 Oct 2020

பசுமை இல்லத்தினால் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.

SHARE

பசுமை இல்லத்தினால் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.

புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும் இயங்கிவரும், “பசுமை இல்லம்” எனும் அமைப்பு கொரோனா அச்சமைந்துள்ள இக்காலத்தில மக்கள் வீட்டிலிருக்கம்போது வீணாக பொழுதைக் கழிக்காமல் வீட்டுத் தோட்டப் பயிற் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் நல்லின பயிர் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றற்றது.

பசுமை இல்லத்தின் தலைவர் ப.கோணேஸ்வர்ன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பொதுச்சுகாதரா பரிசோதகர் க.குபேரன், கிராமசேவை உத்தியோகஸ்த்தர் எஸ்.இம்சன், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர், பயனாளிகள், பசுமை இல்லத்தின் உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பைகளில் வைத்து பராமரித்து உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை முறையில் உரங்களை இட்டு உருவாக்கிய நாற்றுக்களும், அவற்றுக்குரிய பைகளும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா நோய் தீவிரமடைந்துள்ள இக்காலகட்டத்தில் மக்கள் அனாவசியமாக வெளியில் திரிவதை விட்டு விட்டு வீட்டிலே இருந்து சுயமாக வீட்டுத் தோட்ட பயிர்ற் செய்கைகளை இயற்கை முறையில் மேற்கொண்டு, பயனடைய வேண்டும். இச்செயற்பாட்டை பயனாளிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளும் பட்டசத்தில் நாம் நேரடியாக வந்து பார்வையிட்டதன் பின்னர் மேலும் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட உதவித்திட்டங்களையும் வழங்கவுள்ளோம் என பசுமை இல்லத்தின் தலைவர் ப.கோணேஸ்வர்ன் இதன்போது தெரிவித்தார்.

    





























SHARE

Author: verified_user

0 Comments: