9 Oct 2020

திருகோணமலை யின் மூத்த இலக்கியவாதி தாமரைத்தீவான் என்ற சோமநாதர் இராசேந்திரம் அவர்களின் நூல் வெளியீடு வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

SHARE

(ராஜ்)

திருகோணமலை யின் மூத்த இலக்கியவாதி  தாமரைத்தீவான் என்ற சோமநாதர் இராசேந்திரம் அவர்களின் நூல் வெளியீடு வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

கிழக்கு இலங்கையில் மூத்த இலக்கியவாதி யும் தமிழ் பற்றாளருமாகிய திருகோணமலை தாமரைத்தீவான் என்ற சோமநாதர் இராசேந்திரம் அவர்களின் 88வது வயதில் 26வது நூல் வெளியீடான இவ் வெளியீடு திருகோணமலை மெதடிஸ்த பெண்கள்கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண செயலகத்தின் திட்ட மிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் தலைமை யில் நடைபெற்ற து.


திரவிடபற்றாளரான இவரது புதிய எட்டுத்தொகை எனும் இந்நூல் வெளியிட்டை திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் ந. சிறிதரன்  வெளியீட்டுரையைசெய்து வெளியீட்டு வைத்தார்.தொகுப்புரையை ஆசிரியர் எஸ். கோபிநாத் வழங்கனார்

மற்றுமொரு மூத்த எழுத்தாளரான கேணிபித்தன் ச.அருளானந்தம் முதல்நூலை பெற்றுக்கொண்டார். நயவுரையை பிரபல எழுத்தாளர் திருமலை நவம் செய்ய வாழ்துரையை பலரும் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பல கல்விமான்கள், இலக்கியவாதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழவில் தாமரைத்தீவான் ஏற்புரை செய்வதயும்
,வலயக்கல்விப்பணிப்பாளர், திருமலை நவம் ஆகியோர் உரையாற்றுவதனையுும, கேணிபித்தன்் நூலை பெற்றுக்கொள்வதனையும்படங்களில் காண்க.








SHARE

Author: verified_user

0 Comments: