11 Oct 2020

திருகோணமலையில் கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு.!

SHARE

திருகோணமலையில் கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு.

உயர்தரம் மற்றும் 5 ஆம்தரப் புலமைப் பரிசில் எழுதவுள்ள திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பரீட்சை மேற்பார்வையில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கும் கொவிட் 19 பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (10) மாலை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றறது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசாவினால் திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளரும், பரீட்சைகளுக்கான இணைப்பாளருமான இலங்கை கல்வி நிருவாக உத்தியோகத்தருமான எஸ்.சிறிதரன் அவர்களிடம் இவ் பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இதன்போது 57 உயர்தர பரீட்சை நிலையங்களிலும், 5 ஆம் தர 75 பரீட்சை நிலையங்களிலிலுமுள்ள 15650 மாணவர்களுக்கான கொவிட் 19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதில் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பரீட்சை எழுதவுள்ள 15 மாணவர்களும் உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  








SHARE

Author: verified_user

0 Comments: