15 Sept 2020

கடலில் சிலரால் சுருக்கு வலை பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி களுதாவளை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE


கடலில்  சிலரால் சுருக்கு வலை பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி களுதாவளை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை, தேத்தாத்தீவு, களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், உள்ளிட்ட கடற் பிராந்தியங்களில் சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்கு வலை பயன்படுத்துவதைத் தடை செய்யக்கோரி களுதாவளைப் பகுதி மீனவர்கள் களுதாவளை கடற்கரையில் வைத்து செவ்வாய்கிழமை (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம் பரம்பரை பரம்பரையாக இதுவரைகாலமும் இந்தக கடலை நம்பி வாழ்ந்து வருவதாகவும், இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கடலில் தமக்கு எதுவித மீன்களும் பிடிபடிவில்லை எனவும், இதற்கு சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்குவலை பயன்படுத்தி வருவதே இதற்குக் காரணமாகும் எனவே இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திலெடுத்து கடலில் மீன் பிடிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட அந்த சுருக்குவலைப் பயன்பாட்டை தடுத்து நிறுத்தி அவ்வாறு சுருக்குவலை பயன்படுத்தி கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக சட்டநடிவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

நாம் கடலில் கரைவலை இட்டு மீன்பிடித்து வருகின்றோம். இவ்வருடம் ஆரம்பித்து தற்போது 9 மாதங்களாகின்ற ஆனால் இதுவரையில் நாம் தொழில் இல்லாமல் வருமானமிழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இதனால் எமது 200 இற்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் மத்தியில் உணவுத்தட்டுப்பாடு மாத்திரமின்றி வருமானமிழந்த நிலமை நிலவி வருகின்றது. இதற்கு முற்றுமுழுதான காரணம் கடலில் சட்டவிரோதமான முறையில் சிலரால் சுருக்குவலை பயன்படுதத்தி கடலிலுள்ள அனைத்துது சிய மற்றும், நடுத்தர மீன்களையெல்லாம் பிடிப்பதுதான் காரணமாகும், இவ்விடையத்தை தடைசெய்யக்கோரி நாம்; அனைத்து உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கம், அறிவித்துள்ளோம். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும், எட்டப்படவில்லை. 

செட்டிபாளையம், தேத்தாத்தீவு, களுவாஞ்சிகுடி, களுதாவளை, உள்ளிட்ட கடற் பிராந்தியங்களில், 20 இற்கு மேடற்பட்ட படகுகளில வருபவர்கள், இவ்வாறு சுருக்குவலைகளைப் பயன்படுத்தி நெத்தலி, கீரி, பாரை, உள்ளிட்ட அனைத்து, கடல்வளத்தையும், ஒருசிலர் மாத்திரம் லெட்சக்கணக்கில் சுருக்கிக் கொண்டு சென்றால் நாளாந்தம் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் நாம் வாழமுடியாதுள்ளது. இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கையை மேற்கொண்டு தரவேண்டும். இதனால் எமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்டள்ளன. இந்நிலையில், நாம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த கரைவலை மீன் பிடியை விட்டுவிட்டு கூலிவேலை, மேசன்வேலை போன்றவற்றை நாடியாவது எமது குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என அந்த அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களுதாவளை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் செல்லையா இராமலிங்கம் தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: