20 Sept 2020

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மட்டு வாவியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககள் ஆரம்பம்.

SHARE

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மட்டு வாவியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககள் ஆரம்பம்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இலங்கையின்  இரண்டாவது மிகப்பெரியவாவியான மட்டக்களப்பு வாவியைத் தூயமைப் படுத்தும் நடவடிக்கைககள்  ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டதின் கீழ்  காத்தான்குடி வாவிக்கரையோரப் பகுதி சிரமதானம் மூலம் தூய்மைப் படுத்தபட்டன.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகம், இலங்கை இராணுவத்தினர், விளையாட்டுக் கழகங்களின், ஒத்துழைப்புடன் இந்த சிரமதானம் இடம் பெற்றது. காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் தலைமையில் காத்தான்குடி வாவிக்கரையோரப் பகுதியிலுள்ள சுமார் இரு கிலோ மீற்றர் பகுதி  இதனால் தூய்மைப் படுத்தப்பட்டதுன.

இந்த சிரமதானத்தில் இலங்கை இராணுவத்தினர், காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், குபா விளையாட்டுக் கழகத்தினர், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி வாவிக்கரையோரப் பகுதி சுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கு அடந்து காணப்பட்ட பற்றைகளும் வெட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டன. 










SHARE

Author: verified_user

0 Comments: