27 Sept 2020

மட்டக்களையில் நடைபெற்று வரும் கலைகள் மூலம் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்தும் ஆர்ட்சதோன் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை.

SHARE
மட்டக்களையில் நடைபெற்று வரும் கலைகள் மூலம் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்தும் ஆர்ட்சதோன் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை.கலைகள் மூலம் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்காக,  திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றது. GIZ மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும், இலங்கைத் திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலப்படுத்தும் நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு பகுதியாக இச் செயற்பாடு முன்நெடுக்கப்பட்டுள்ளன. 

பிரிட்டிஷ் கவுன்சிலால் வழங்கப்படும் பயிற்சிப் பட்டறை இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றது. இலங்கை முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது கலைஞர் தொகுதியினருக்கான பயிற்சி வியாழக்கிழமை (25) மட்டக்களையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த பட்டறை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெற்று  திங்கட்கிழமை (28) முடிவடைகின்றது. 

இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ள அடுத்த கலைப் பிரிவினருக்கான பயிற்சிப் பட்டறை அடுத்த வாரம் இதுபோன்று முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை மட்டக்களப்பில் அதே சுற்றுலா விடுதியில் நடைபெறவுள்ளது. 

ஒவ்வொரு பயிச்சிப் வடகிழக்கு மற்றும் மலையகம், உட்பட இலங்கை முழுவதிலுமிருந்து பாடகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதன்போது கலந்ர் கொள்கின்றனர். இந்த பயிற்சிப் பட்டறைக்கு கலை நிபுணர் தானியா வர்ணகுலசூரியா மற்றும் பிரபல கலைஞர்கள் சுரேன் தம்பிராஜா, ஜூலியன் ஆனந்தரமணன் மற்றும் ஜோசுவா ஹெபி ஆகியோர் இணைந்து பயிற்சிகளையும், விளக்கங்களையும் வழங்கி வருகின்றனர்.

மேலும் இதன்போது பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகான, லூயிஸ் கோச்சர் (கல்வி மற்றும் ஆங்கில இயக்குநர்), மார்க் சாமுவேல் மற்றும் விஜயபாலா சின்னதம்பி ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்தப் பயிற்சிப் பட்டறைக்குப் பின்னர் பங்கேற்பாளர்கள் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்த மல்டிமீடியா கலைப்படைப்புகளுக்கான திட்டங்கள் உருவாக்கவும், திட்ட நிதியுதவிக்கான தங்கள் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான கலைத் திட்டங்கள் மூலம் இலங்கை முழுவதும், கலை மூலம் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்கான திறன்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


















SHARE

Author: verified_user

0 Comments: