23 Sept 2020

கிராமிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை.

SHARE


(ஏ
.எச்.ஹுஸைன்) 

கிராமிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை.கிராமப் புறங்களில் விளைவிக்கப்பட்டு உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பின்றி கவலையோடு காலங்கழிக்கும்; விவசாயிகளிடமிருந்து அவர்களது உப உணவுப் பயிர் உள்ளீடுகளை சிறந்த விலையில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி வலயப் பொறுப்பாளர் எம். ஐ. எம். உசனார் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களுக்கிடையிலான கூட்டுறவு வேலைத்திட்டம் வளமான சங்கங்கள் வளமற்ற சங்கங்களை வளப்படுத்தல் எனும் நிகழ்வு ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவு சங்கப் பரிவிலுள்ள சின்னப்பூக்குளத்தில் புதன்கிழமை 23.09.2020 இடம்பெற்றது.

பொறுப்பாக்கப்பட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.எம். பைறூஸின் திட்டத் தயாரிப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  இத்திட்டம் பற்றிய தெளிவூட்டல் அவரால் வழங்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் எஸ். சத்தியவரதன் தலைமையில் சின்னப்பூக்குளம் மீனவர் கூட்டுறவு சங்க வளாகத்தில்  இடம்பெற்ற இந்நிகழ்வில்  சின்னப்பூக்குளம் மீனவர் சங்கத்தினரின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக அவர்களில் 35 பேர் கிளை அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

கலந்து கொண்ட திணைக்கள அதிதிகளினால் கூட்டுறவின் முக்கியத்துவம் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்துதல் கிராமிய வங்கியின் விஸ்தரிப்பு தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே வி தங்கவேல் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக புள்ளி விவரங்கள் பொறுப்பாளர் ஏ. எம். அஜ்வத் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. பி. எம். றினோசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: