6 Sept 2020

குளக்கரையில் நீருக்காக தோண்டப்பட்ட மடுவில் வீழ்ந்து 12 வயதுச் சிறுமி பலி

SHARE


(
ஹுஸைன்)

குளக்கரையில் நீருக்காக தோண்டப்பட்ட மடுவில் வீழ்ந்து 12 வயதுச் சிறுமி பலி.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின்  குகனேசபுரம் கிராமத்தில் 12 வயதுச்  சிறுமியொருத்தி குளக்கரையில் நீருக்காக தோண்டப்பட்ட மடுவில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை 05.09.2020 பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் குகனேசபுரம், காளிகோயில் வீதி, 6ஆம் குறுக்கை  அண்டி வசிக்கும் சண்முகநாதன்  விஜயரூபினி (வயது 12) எனும் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு பவலியாகியுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது தற்சயம் நீர் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால், ஆலங்குளக் கரையில் தமது குடிநீர்த் தேவைக்காக மடு ஒன்று தோண்டி அதிலிருந்து நிரைப் பெற்று வந்துள்ளனர்.

சம்பவ தினம் இந்தச் சிறுமியும் அவளது சகோதரியும் அந்த மடுவுக்கருகில் நின்றிருந்தபோது அங்கு மண் திட்டுக்கள் சரிந்ததினால் சிறுமி திடீரென மடுவுக்குள் முகங்குப்புற வீழ்ந்து நீருக்குள் மூழ்கியுள்ளாள்.

அவளது சகோதரி அவலக் குரல் எழுப்பிக் கொண்டு ஓடி வந்து தகவல் தெரிவித்துள்ளார்.

அச்சமயம் உதவிக்கு விரைந்தோரால் சிறுமி மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டபோதும் பிற்பகல் பிற்பகல் 3.40 மணியளவில் சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வண்டையா வள்ளியம்மை (வயது 35) வறுமை காரணமாக மூன்று பெண் பிள்ளைகளையும் பராமரிக்கும் வாழ்வாதாரத் தொழிலாக ஆடு மேய்ப்பதில் ஈடுபட்டு வருபவர் என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி தனது மூன்றாவது புதல்வி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் வைத்திய அதிகாரி எச்.எம்.எம். ஜஸீர் உடற்கூறாய்வுப் பரிசோதனை செய்த பின்னர் சிறுமியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினர். 







SHARE

Author: verified_user

0 Comments: