31 Aug 2020

தொன்மையான மாவடிவேம்பு ஸ்ரீ தில்லைவைரவர் ஆலயத்திற்கான அடிக்கல் நடல் விழா.

SHARE

தொன்மையான மாவடிவேம்பு ஸ்ரீ தில்லைவைரவர் ஆலயத்திற்கான அடிக்கல் நடல் விழா.

மாவடிவேம்பு பகுதியில் அமைந்துள்ள தொன்மையான ஸ்ரீ தில்லை வைரவர் 

ஆலயத்திற்கான அடிக்கல் நடல்விழா இன்றைய தினம் சுபவேளையில் ஆலயத்தின் தலைமை பூசகர் நமசிவாய நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீ தில்லை வைரவர் ஆலயமானது கடந்த 1954 ஆம் ஆண்டில் இருந்து தற்காலிகமான கட்டிடத்தில் அனைத்து பூசை வழிபாடுகளும் நடைபெற்று வந்த நிலையில் நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிப் பங்களிப்பு மூலமாக ஆலயத்திற்கான மூலஸ்தான கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

ஆலயத்தில் வருடாந்தம் சடங்கு உற்வம் உற்பட ஏனைய விசேட பூசை நிகழ்வுகளும் வழமையாக ஆலயத்தில் இடம்பெற்று வருகின்றமை சிறப்பு. ஒவ்வொரு பூரண பூசை ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெறுகின்றது.

கடந்த காலங்களில் இருந்து ஆலயத்திற்கான பல தேவைப்பாடுகள் 

மற்றும் அடிப்படை வசதிகளான குடி நீர் மற்றும் மின்சார வசதி போன்றவை 

பாரிய தேவைப்பாடாக காணப்பட்டு வருகின்ற நிலையில் நன்கொடையாளர்கள் முன்வந்து ஆலயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பங்குகொள்ள முடியும்மென ஆலய நிருவாக சபை வேண்டிநிற்கின்றது.

எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஆலயம் என்பதால் பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் காணப்படுகின்றது. இந்நிகழ்வில் இம்முறை பெரமுன கட்சியில் பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் நின்ற எஸ்.விஸ்ணுகாந்தன் இடம்பெற்ற பூசைகளில் கலந்துகொண்டு அடிக்கல் வைத்துடன் ஆலயத்தின் தேவை குறித்து 

தான்னால் இயன்ற முற்சியையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் நிருவாக சபை முன்னிலையில் தெரிவித்தார்.

ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்கள் இன்றைய தினம் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அடிக்கல நடல் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: