30 Aug 2020

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் மேற்கொண்ட கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் பேரணியும்.

SHARE

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் மேற்கொண்ட கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் பேரணியும்.

தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் ஞாயிற்றுக்கிழமை (30) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பு பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் (ஜனா) மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகஸ்வரன் ஞா.சிறிநேசன், உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், ஏனைய பொது அமைப்புகளுமாக ஏராளமான பொதுமக்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தினுள் வைத்து போராட்டத்திற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தவேளை பொலிஸார் போராட்டக்காரர்களை ஆலய வளாகத்தினுள் வைத்து பூட்டி தடை செய்தனர். ஆயினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதவினை உடைத்து வெளியேறி அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மக்கள், இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் சென்றது. காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டங்களை நடத்தி செல்லும் போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன.

தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இதன்போது கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






































SHARE

Author: verified_user

0 Comments: