3 Aug 2020

தமிழர்களின் அடிப்படை உரிமையுடன் கூடிய மொழி சார்ந்த விடையங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், இம்மாவடடத்தில் அபிவிருத்தத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் -வேட்பாளர் உதயகுமார்.

SHARE


தமிழர்களின் அடிப்படை உரிமையுடன் கூடிய மொழி சார்ந்த விடையங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், இம்மாவடடத்தில் அபிவிருத்தத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் -வேட்பாளர் உதயகுமார்.

நாங்கள் தமிழர்களின் அடிப்படை உரிமையுடன் கூடிய மொழி சார்ந்த விடையங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், இம்மாவடடத்தில் அபிவிருத்தத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும், பெண்கள் தலைமை தங்குகின்ற மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சுமார் 40 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம், 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சுமைகள், 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட புணர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகள்,  என்பன கழையப்படல் வேண்டும். அதுபோல்  விவசாயிகள், மீன்பிடியாளர்கள், கைத்தொழில் முயற்சியாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் போன்றோர்களினதும், வருமானத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். கல்வி, கலாசாரம், விளாயட்டு, பண்பாட்டு உள்ளிட்ட விடையங்களையும், அபிவிருத்தி செய்வதனுமாக இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்யலாம் என எதிர்பார்க்கின்றோம்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் அரசாங்க அதிபருமான மாணிக்கம்  உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை(02) மாலை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். 


மக்களுடைய இருப்பு, காணிசம்மந்தமான விடையங்கள் இம்மாவட்டத்தில் கேள்விக்குறியாகி வருகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான விடையங்களை தேசியரீதியிலும், சர்வதேச ரீதியிலும் தெரிவித்து மக்களின் உரிமை தொடர்பான விடையங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும். மக்கள் தொடர்ந்து அவர்களின் உரிமை தொடர்பான விடையங்களை ஆதரித்துச் செயற்பட்டு வருகின்றதை நாங்கள் அவதானிக்கின்றோம். அரசாங்க அபிவிருத்தித்திட்டங்களுக்கு மேலாக  தற்சார் பொருளாதார அமைப்பொன்றை உருவாக்கி சிறிய கைத்தொழில் பேட்டைகளுடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். விவசயம், கைத்தொழில் முயற்சிகளிலும், பெறுமதிசேர் விடையங்களை உட்பபுகுத்தி அதனை மேம்படுத்த வேண்டியுள்ளது.  

என்னுடைய அரசியலிலே நான் மக்கள் மையப்படுத்தி அரசியலை ஏற்படுத்துவதற்கு நான் முனைகின்றேன். கிராமங்கள் தேறும் சிறிய குழுக்களை உருவாக்கி அவ்வாறான குழுக்களினூடாக நான் செயற்படுவதற்கு நான் விளைகின்றேன். அவ்வாறெனில்தான் மக்களை அண்மித்ததாக இருந்து அரசியலைச் செயற்படுத்தக்கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன். ஆனாலும் மக்களை அரசியல்வாதிகள் மக்களைச் சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றார்கள், அதற்காக வேண்டி கிராம வலம் என்கின்ற வேலைத்திட்டம் ஒன்றையும் முன்வைக்கவுள்ளேன். அதபோல் மக்களின் குறைகளை இலகுவில் தீர்க்கக்கூடிய மக்களின் குறைகேள் பொறி முறை ஒன்றையும் முன்வைக்கவுள்ளேன். இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு தொடர்பிலும், அரசிடம் மாத்திரமின்றி வெளிநாடுகளிலும், உதவிகளைப் பெற்று. தொழில் பேட்டைகளையும் அமைத்து அதனூடாகவும் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்தமுடியும். ஏன அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: