26 Aug 2020

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் 66 வது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

SHARE


மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் 66 வது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரைத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும்  ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை திருத்தலம் இலங்கை திருநாட்டில் தூய சதாசகாய அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயமாகும்.

அன்னையின் 66 வது வருடாந்த திருவிழா  28.08.2020 வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணிக்கு கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சுருபப் பவனியுடன் ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்ததும் மாலை 5.30 மணிக்கு பங்குதந்தை அருட்பணி அந்தோனி டிலிமா அடிகளார்  தலைமையில் கொடியேற்றப்பட்டு, முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கொடியேற்றத்தினை  தொடர்ந்துவரும்  நவ நாட்காலங்களில் தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து திருப்பலி, மறையுரை, அன்னையின் ஆசீர் என்பன இடம்பெறவுள்ளது.

அதேவேளை அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரையானது மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினரின் நெறிப்படுத்தலுடன், எதிர்வரும் 05.09.2020 ஆந் திகதி புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து வவுணதீவு ஊடாகவும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்தும் கரடியனாறு ஊடாகவும் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பாதையாத்திரையன்று காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கமாட்டாது, மாறாக பாதயாத்திரையானது திருத்தலத்தை சென்றடைந்ததும் திருத்தலத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

அன்னையின் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலியானது எதிர்வரும் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கவுள்ளதுடன், திருப்பலியின் நிறைவில், கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக சுகாதார முறைப்படி முகக் கவசம், சமூக இடைவெளி என்பவற்றைப் பேணி ஆலய நிருவாகத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியவாறாக அன்னையின் அருளாசியை பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: