27 Aug 2020

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் சமுதாய சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கொவிட் - 19 விழிப்புணர்வும், அடிப்படை முதலுதவி பயிற்சியும்.

SHARE
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால்  சமுதாய சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கொவிட் - 19  விழிப்புணர்வும்,  அடிப்படை முதலுதவி பயிற்சியும். 
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் கிழக்கு மாகாணத்iதுச் சேர்ந்த சமுதாய சீர்திருத்ததிணைக்கள உத்தியோக்த்தர்களுக்கு கொவிட் - 19 தொடர்பிலான விழிப்புணர்வும், அடிப்படை முதலுதவில் பயிற்சியும்;  வியாழக்கிழமை (27) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா, மற்றும் ச.கணேசலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டு அடிப்படை முதலுதவிப் பயிற்சியை வழங்கிவைத்தனர். மேலும் கொவிட் - 19 தொடர்பான விளக்கங்களை சிரேஸ்ட்ட தொண்டர் ஆர்.எல்.ரிசாங்கன் அவர்கள் வழங்கி வைத்தனர்.

இதன்போது காரியாலய நடவடிக்கைகளின்போது, மற்றும் ஏனைய இதர சேவகைளின்போதும் ஏற்படும் இடர்களுக்கு எவ்வாறு முதலுதவி மேற்கொள்வது, என்பது தொடர்பிலும், மற்றும் தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டுள்ள கொவிட் - 19 தொடர்பில் அது எவ்வாறு பரவுகின்றது, தடுப்பதற்கான வழிமுறைகள், மற்றும் பாதுகாப்புக்காக கைக்கொள்ள வேண்டிய விடையங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.









 
SHARE

Author: verified_user

0 Comments: