26 Aug 2020

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்ரர் ஆலயத்தில் 06.09.2020 அன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுமமப்பட்ட பக்தர்களுடன் தேரோட்டம் நடைபெறும் - ஆலய நிருவாகம்.

SHARE
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்ரர் ஆலயத்தில்  06.09.2020 அன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுமமப்பட்ட பக்தர்களுடன் தேரோட்டம் நடைபெறும் - ஆலய நிருவாகம்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்ரர் ஆலய வருடாந்த திருவிழா 21.08.2020 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது  07.09.2020 அன்று தீத்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் 06.09.2020 அன்று தேரோட்டம் நடைபெறும். என மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றியீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை (25) மலை மேற்படி ஆலயத்தில வைத்து ஆலய பரிபாலன சபையினர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்…

ஏற்பட்டுள்ள கொரோனா எனும் கொடிய நோயின் நிமிர்த்தம் இறைவனுக்கு பூஜை கைங்கரியங்களை மேற்கொள்வது என நாம் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ்வருடத்தில் ஆலயத்தில் தேரோட்டம் இடம்பெறுவதற்கு சில தடங்கல்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும்,  அக்கூட்டத்தில் நாம் தேரோட்டம் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க உயர்பீடத்திலிருந்து அதற்குரிய உரிய அனுமதியைப் பெறுமாறு எமக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கிழக்கிலங்கையில் தேரோடும் கோயில் என புகழ் பெற்ற எமது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில் வருடாந்தம் பெருந்திரளான அடியார்கள் வருகை தருவது வழங்கம். இந்நிலையில் இவ்வருடம் கொரோனா நோயின் நிமிர்த்தம் மட்டுப்படத்தப்பட்ட அளவில் அடியார்களைக் கொண்டு இந்த திருவிழாக்களைக் கொண்டு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இவ்வருடமும் தேரோட்டம் நடைபெறுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருந்தோம். அதற்கு உரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. எமக்கு இந்த அனுமதியைத் தந்துதவிய அரச நிருவாகத்தினரக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த பன்னெடுங்காலமாக வருhடாந்தம் இவ்வாலயத்தில் தேரோட்டத் திருவிழா இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாலயத்தில் தேர் இழுக்கும்போது சீற்றம் கொண்டு ஒரு தேர் ஆற்றில் விழுந்துள்ள அற்புதமும் இவ்வாலயத்தில் நிழ்ந்துள்ளது. இந்நிலையில் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல், ஆகிய ஐந்தொழில்கள் ஊடாக எம்பெருமான மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை யாருவம் அறிவார்கள். அந்த வகையில் எதிர்வரும் 06.09.2020 அன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. இருந்த போதிலும், தேரோட்ட நிகழ்வில் பொது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளிகளைப் பேணியும், அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும். பக்தர்கள் வீட்டிலே இருந்த வண்ணம் இவ்வருடம் தேரோட்ட நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக தரிசனம் செய்யலாம். 

இந்த தேரோட்ட விழாவிற்கு மட்டுப்பட்டுத்தப்பட்ட, குறிப்பட்ட மக்கள் மாத்திரம்மான் அழைக்கப்பட்டு கலந்து கொள்வர்கள். பெருந்திரளான மக்கள் தேரோட்டதின்போது கலந்து கொள்வது தடைபெய்யப்படும் இதில் எதவித மாற்றமும் இல்லை. எனவே மக்கள் அனைவரும் ஊடகங்கள் வாயிலாக வீட்டிலிருந்த வண்ணமே தரிசனம் பெய்யவேண்டும். 

வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமையையும், பெருமையும், தொன்மையையும், எடுத்தியம்புகின்ற இந்த ஆலயம் மன்னராட்சிக் காலத்தில், குணசிங்க மன்னன் மட்டக்களப்பை ஆளும்போது, இந்திய நடைமுறையில் 3 தேர்கள் இருந்த நடைமுறையை அனந்த வர்மன் நடைமுறைப் படுத்தியவன் பின்னர் மகோ 13 ஆம் நூற்றாண்டில் இந்த தேரைக் கொண்டு வந்துள்ளார். அதே நடைமுறையை இந்த அலயத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதே நடைமுறையில் இருந்த 3 தேர்தகளில் ஒரு தேர் தெய்வக் குற்றம் காரணமாக தாமாகவே ஓடிச் சென்று ஆற்றிலே விழுந்த வரலாறுகள் உள்ளன.

தற்போது பல நூற்றாண்டுகள் கழிந்தாலும் அதே அப்போது கொண்டு வரப்பட்ட தேர்கள்தான் தற்போதும் உள்ளன. அவ்வாறு இலங்கையில் முதன் முதல் தேராடம் நிகழ்ந்த ஆலயம் கொக்கட்டிச்சேலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்தான். எனவே இவ்வாறு சிறப்பு மிக்க இந்த தேரோட்ட விழாவை இவ்வருடமும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் நடாத்துவதற்கு அனுமதி வழற்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றியீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: