17 Jul 2020

நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையம் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு. (வீடியோ)

SHARE
நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையம் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு.
தமிழர்களின் இருப்பு தற்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றது. அவ்வாறுதான் தமிழர்களாகிய நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் தமிழர்களின் இருப்பை உறுத்தி செய்யப் கூடிய தேர்தல் இம்முறை நடைபெறவுள்ளது. இந்நிலையில்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையம் நன்கு சிந்தித்து சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையத்தின் ஊடகப் பேச்சாளர். சி.கே.ஆர்.பிரியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போத அவர் மேலும் தெரிவிக்கையில்….

கிழக்கு மண் தமிழர்களிடமிருந்து பறிபோகின்ற காலத்தில்தான் நாங்கள் வழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த கிழக்கு மண்ணை ஆளக்கூடிய தலைவன் என்றால் அது சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள்தான். குறிப்பாக மட்டக்களப்பு மவாட்டத்திற்கான கட்சியும், இம்மாவட்டத்திற்கான ஒரு தலைமையும், இதுவரைகாலமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் மட்டக்களப்பு மவாட்டத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் அந்த வறுமைக் கோட்டின் கீழிருந்து விடுபடாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையம் நன்கு சிந்தித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரிப்பதற்கும், அவர்களுக்கு வாக்களிப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையிலும்கூட சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் அதிகளவு அபிவிருத்தி வேலைகளை இம்மக்களுக்காகச் செய்திருக்கின்றார். அந்த நோக்குடன் நாங்கள் மீண்டும் அவ்வாறான அபிவிருத்தி வேலைகளைக் கட்டியயெழுப்புவதற்காகவும், மட்டக்களப்பு மாவாட்டத்தில் வாழ்கின்ற அனைத்து இளைஞர் யுவதிகளும் ஒன்றிணைந்து அவரை நாடாளுமன்றம் அனுப்பி நமது விடியலையும், மட்டக்களப்பு மண்ணையும், அவர்களின் கைகளிலே கொடுத்து அபிவிருத்தியையும், உரிமையையும், தனித்துவத்தையும் பெற்றெடுக்க வேண்டும் என்பதுவே எமது நோக்கமாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பின்போது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையம் மட்டக்களப்பிலிருந்து பல சமூக சேவைகளைச் செய்து வரும் ஒரு தன்னார்வ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.






            

SHARE

Author: verified_user

0 Comments: