27 Jul 2020

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி மலர்ந்தால் வடகிழக்கில் உள்ள பெண்களின் கண்ணீரை துடைப்போம்.

SHARE
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி மலர்ந்தால் வடகிழக்கில் உள்ள பெண்களின் கண்ணீரை துடைப்போம். என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் முன்னணியின் தேசிய செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அசோக்க லங்கா திலக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் முன்னணியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பு மாங்காட்டில் கிவேஸ் மண்டபத்தில்  சனிக்கிழமை(25)மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி  தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும்,வேட்பாளருமான ப.சந்திரகுமார்,மகளிர் முன்னணியின் தமிழ் பிரிவுக்கான தலைவியும்,கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான திருமதி.மகேஸ்வரி மகிமைதாஸ் திருச்செல்வம்,மகளிர் முன்னணியின் மாவட்ட,தொகுதி,கிராம அமைப்பாளர்கள்,மகளிர் அமைப்புக்கள் உட்பட சுமார் 2000 பெண்கள் கலந்துகொண்டார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில்... இந்த நாட்டினுடைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபக தலைவர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர்களின் ஆசீர்வாதத்தால் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ப.சந்திரகுமார் நிச்சயமாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு அவருக்கு காத்திருக்கின்றது.அவ்வாறு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தும்,அவரின் விருப்பு இலக்கமான 4 இற்கும் வாக்களித்து வெற்றியடையச் செய்வீர்கள் என நான்  நம்பிக்கை வைத்துள்ளேன்.இவ்வாறு திரு சந்திரகுமார் வெற்றியடைந்து ;வெற்றியடைந்திட்டார் எனும் வெற்றிச் செய்திக்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த,பஷில் ராஜபக்ஷ காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மாவட்டத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் நாற்பதினாயிரம்(40,000)குடும்பங்கள் எதிர்நோக்கும் பெண்களின் பிரச்சனை,பெண்களின் வாழ்வாதாரம்,குடிப்பதற்குரிய குடிநீர் பிரச்சனை,வங்கிகள் சம்பந்தமான பிரச்சனை,பொருளாதாரப் பிரச்சனை,கல்வி,பாலர் பாடசாலை பிரச்சனைகள், சுயதொழில் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை இம்மாவட்டத்தை சேர்ந்த எங்களுடைய வேட்பாளர் சந்திரகுமார் மிகவும் தெட்டத்தெளிவாக அறிந்திருக்கின்றார்.இவரை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து அரசாங்கத்தின் அத்தனை அபிவிருத்தியையும் அரசாங்கத்திடம் பெற்றிட வேண்டும்.இதுதான் தமிழ்மக்களுக்கு கிடைத்த அரசியல் சாணாக்கியமாகும்.

இவ்வாறான பிரச்சனைகளை வேட்பாளர் சந்திரகுமார் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் உணர்ந்து மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெற்று மட்டக்களப்பை முன்னேற்றுவதற்கு தயாராகுங்கள்.


இன்று இந்த மாவட்டத்தில் க.பொ.சாதாரணம்,க.பொ.த.உயர்தரம் படித்த 50,000 இளைஞர்,யுவதிகள் தொழில் இன்றி தத்தளிக்கின்றார்கள்.இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  கடைகளில் எமது தமிழ் சகோதரிகள் 3000 பேர் பல்வேறு அசௌரியங்களுக்கு மத்தியில் குறைந்த சம்பளத்துடன் வேலை பார்த்து வருகின்றார்கள்.இவர்களுக்கு நிரந்தர சம்பளம் பெறுவதற்கு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.40,000 மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் வறுமையுடன் கண்ணீரையும்,கம்பலையும் அனுபவித்து வருவதை என்னாலும்,எம்முடைய வேட்பாளராலும் கண்டிருக்கின்றோம்.இவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு எமது ஜனாதிபதியால் மட்டும்தான் முட்டியும்.

இன்று இம்மாவட்டத்தில் இருக்கின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பல இன்னல்களுடன் தமது மனதில் சோகமாகவும்,கண்ணீருமாக வாழ்ந்து வருகின்றார்கள்.போதையற்ற நாட்டை உருவாக்குவதில் ஜனாதிபதி சிறப்பான கவனத்தை எடுத்து வருகின்றார்.நாட்டிலே கொரோனோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டது போன்று போதைப்பொருளும் நாட்டில் முற்றாக ஒழிக்கப்படும்.நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி மலர்ந்தால் வடகிழக்கில் உள்ள பெண்களின் கண்ணீரை துடைப்போம்.

ரணில் விக்கிரமசிங்க கடந்த நான்கரை (4 1/2)ஆண்டுகளில் எமது நாட்டின் பொருளாதாரத்தை இல்லாமல் செய்திட்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மக்களின் ஆணையை வழங்குமாறு சந்தர்ப்பம் கோரியிருக்கின்றார்.ஒன்றாக ஐக்கிய தேசிய கட்சி இருந்தபோது நாட்டு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.இப்போது ஐக்கிய தேசிய கட்சி இரண்டு துருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியகட்சி பிரிக்கப்பட்ட நிலையில் மக்களின் பிரச்சனையை தீர்த்துதருவதாக கோருவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.நாட்டின் சுகாதாரதுறையின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலின் போது மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து சந்திரகுமாரை அமைச்சராக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ்மக்களின் துயர்துடைக்க வழிசமைப்போம் எனத்தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: