11 Jul 2020

மாணவர்களுகான விழிப்புணர்வு பதாதைகள் வழங்கி வைப்பு.

SHARE
(ராஜ்)

கொரோனா (COVID -19) தொற்று காரணமாக பாடசாலைகள் நீட்ட நாட்களாக மூடப்பட்டு மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்படுகின்ற இச் சூழலில் மாணவர்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ளும் படிமுறைகள் அடங்கிய விழிப்புனர்வு பதாதைகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 500 பாடசாலைகளுக்கு வழங்கும் நோக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வழங்கும் பணிகளை அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) முன்னெடுத்து வருகின்றது.
இச் செயற்பாட்டினை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் அனுமதி மற்றும் ஆலோசனை வழிகாட்டலின் பேரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 08.07.2020 ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முறை, சம்மாந்துறை, அம்பாறை, மகாஓயா, தெஹியந்தகண்டிய, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான பதாதைகளை குறித்த வலயக்கல்வி அலுவலகங்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 123 பதாதைகளும், சிங்கள பாடசாலைகளுக்கான 60 பதாதைகளும் வழங்கி பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
நேற்றைய தினம் (09) மாகாண கல்வி பணிப்பாளரிடம் அவரது அலுவலகத்தில் பதாதைகள் கையளிக்கப்பட்டதுடன், திருமலை வலையக்கல்வி பணிப்பாளரிடமும் 32 தமிழ் மொழியிலான பதாதைகளும் 12 சிங்கள மொழியிலாக பதாதைகளும் வழங்கிவைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: